பகுதி ஒன்றில் நாம் இல்ல வழிபாடு செய்வதால் விளையும் பயன் யாது என்பதனை ஒரு குட்டி கதையோடு மேலோட்டமாக பார்த்தோம். இனி இல்ல வழிபாட்டில் செய்ய வேண்டியவை செய்யக் கூடதவைகள் பற்றி அறிவியல் சார்ந்த விளக்கத்தோடு ஒவ்வொரு பகுதியாக பார்ப்போம்.
இல்லத்தில்
நாம் வழிபாடு செய்ய முதலில் பூஜை
அறையென்று ஒன்று தேவையாகும். இந்த அறையை எப்படி
அடையாளம் கண்டு நாம் இல்ல வழிபாட்டிற்கு பயன் படுத்துவது என்பதை தெளிவாக
தெரிந்திருக்க வேண்டும். பூஜை அறை என்பது நமது இல்லத்தில்
அமைதியை கொடுக்கக் கூடிய சூழலை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அந்த அறை நமது சுய தேவைக்கு பயன்படுத்துவதாக இருக்க கூடாது. இருளான நிறங்களில் இருத்தல் கூடாது. எப்பொழுதும்
தூய்ம்மையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
அதனை
தொடர்ந்து, பூஜை அறையில் சுவாமியின் திருவுருவ படங்கள்
கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். இதன் காரணம், காலையில் நாம் எழுந்து பூஜை செய்யும்
போது உதிக்கும் சூரியனின் கதிரலைகள் நம் மீது படியும் போது துவண்டு போயிருக்கும்
நரம்புகள், உறுப்புகள் அனைத்திற்கும் புத்துணர்ச்சி பெற
செய்வதே இதன் முக்கிய காரணமாகும். பலர் என்ன செய்கின்றனர்
என்று பார்த்தால் கடவுளுக்கு சக்தி கிடைக்க வேண்டும் அதனால் தான் நாங்கள் கிழக்கே
நின்று மேற்கில் இருக்கும் கடவுளை வழிபடுகிறோம் என்கின்றனர். இங்கே ஒரு விஷயத்தை நாம் அவசியம்
கவனிக்க வேண்டும். நம்மை நோக்கி பாயும் சக்திகள் யாவும்
நமக்கு நேராக, குறிப்பாக முகத்திற்கு நேராக படியும் போதே
அதன் ஆற்றல் நம்மை சேருகின்றது.
அத்தோடு
நமது மூளையை சுறுசுறுப்பாக செயல் படவும் செய்கிறது. ஆக
பூஜை அறையில் சுவாமியின் திருவுருவம் கிழக்கில் இருப்பதை உறுதி செய்வது மிக மிக
அவசியம். தொடர்ந்து, சுவாமியின்
திருவுருவப் படங்கள் தேர்வு செய்யும் போது சாந்தமாகவும், தேவர்
தேவியராக (கணவன், மனைவியாக) அல்லது குடும்பத்தோடு இருப்பதாக இருப்பது சிறப்பு. உதாரணமாக,
விநாயகர், முருகன் (வள்ளி
தெய்வானையோடு, வேலவனாக), மகா விஷ்ணு (
பெருமாளாக, லக்ஷ்மி நாராயணன்), சிவன் பார்வதியாக, போன்று இருப்பதுவே உத்தமம்.
கோரமாகவோ, சமஹாரம் செய்வது போன்றோ இருப்பதை தவிர்ப்பது சிறப்பு. உதாரணமாக, காளி, மஹிஷசூரபத்மினி,
நரசிம்மர் சம்ஹாரம் செய்வது போன்று. குல
தெய்வத்தின் அடிப்படையில் வழிப்படுவது தவறுகள் ஏதும் இல்லை. ஏன்
தெய்வ திருவுருவங்களை தேர்வு செய்து வழிப்பட வேண்டும் என்கிறேன் என்றால், இன்றைய காலத்தில் நமக்குள் இருக்கும் வேளைப்பழு, மன
உழைச்சல் போன்றவைகளை குறைக்கவே இதற்கு காரணமாகிறது. சாந்தமாக
தினமும் முகம் சுழிக்காது நம்மை பார்த்து அருளும் இறைவனது முகத்தை பார்க்கும் போது
நம்முள் ஒரு நம்பிக்கை உருவாகும். இனைவன் மீது நாம்
வைத்திருக்கும் நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கவும் செய்கிறது.
இதனை
விஞ்ஞானிகளும் உறுதி செய்து வருகின்றனர். ஆகவே இறைவனின்
நமது இல்லத்தில் இருக்கும் இறைவனது திருவுருவ தேர்வு என்பது மிக மிக அவசியமாகிறது
என்பதனை இதன் வழி தெரிவித்து விடைப்பெறுகிறேன் தொடர்ந்து சந்திப்போமாக.
தொடரும்...
விருச்சத்தின்
கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்