சைவம் ஒங்கிட நமது பங்கு
இன்று நமது நாடு, நாட்டின் மக்கள் அனைவரும் அறிவியல், கணினி தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினை
நோக்கி பயனித்து கொண்டிருக்கும் வேளையில் சமயத்தின் அடிப்படையிலான தாக்குதல்கள்
சேர்ந்தே காணப்படுகிறது. மதமாற்றம் என்ற போர்வையில் நம்மை திணிப்பதற்கு பயன்படும்
கருவி யாதென்றால் வறுமை, தெளிவில்லாத சிந்தனை. நாம் அனைவரும்
இந்துக்கள், சமய அடிப்படையில் சைவர்கள் என்ற தெளிவினை பெற வேண்டும். "கற்று
கொடுத்தவன் எனது முன்னோர், அவன் வழி வந்த எனக்கு புதிதாக பாடம்
கற்பிகின்றனரே?" என்று எதிரத்து கேட்காத அவலம் தான்
நமது மக்கள் மதம் மாறி தவிக்கின்றனர். நாம் அனைவரும் இந்துக்கள். சமய அடிப்படையில்
சைவர்கள் என்பதனை மறந்திடக் கூடாது. ஒரு சைவர்களாக இருந்து நாம் செய்ய வேண்டிய
காலக் கடமைகளை செய்ய தவறினால் அனைத்தையும் தொலைத்து விட்டு அஸ்திவாரமே இல்லாமல்
போக வேண்டியது தான்.
சைவச் சமயத்தின் சிறப்பினை நமது
முன்னோர்கள் எப்படி போற்றியுள்ளனர் தெரியுமா?
"சைவத்தின் மேற் சமயம் வேறில்லை
அதிற்சாற் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும்
நான்மறை செம்பொருளாய் வாய்மை வைத்த
சீர்திரு தேவாரமும், திருவாசகமும், திருமந்திரமும்
உய்வைத்தரச் செய்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மணிவாசகர்,
திருமூலர் பொற்றாள் எம்
உயிர்த்துணையே".
நமது சைவ சமயத்திற்கு மேல் வேறு
எதுவும் இல்லை என்று அன்றே உரைத்தனர். வாழ்க்கைக்கு அதிமுக்கியம் தரக் கூடியவை
திருமுறைகள் தான் என்றும் அதனை வழங்கிய அடியார் பெருமக்களை வாழ் நாள் முழுவதும்
மறத்தல் ஆகாது என்றும் நம்மை தெளிவடைய சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து, குளிர்த்து, உணவு உண்பதற்க்கும், வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாதகவும், துவங்கும் காரியங்கள் சித்தியை தருவதற்கும், மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்க,
மாலையில் விளையாடுவதற்கும், அலவலாவதற்கும், இரவில் படுக்கை செல்லும் வரை திருமுறை
பாடல்கள் நமக்கு வழங்கப்படிருக்கிறது. பக்தியை முன்னிலைபடுத்துவது மட்டும் இல்லை
திருமுறை அறிவியல், மருத்துவம், கணிதம், விஞ்ஞானம் முதற்க் கொண்டு நமக்கு
திருமுறைகள் வழங்கப் பெற்றுள்ளது. மனிதன் நல்ல நலம் பெற்று, ஆரோக்கியமான வாழ்ழினை வாழவும்,
பகை ஒழித்து எல்லாரிடத்திலும் அன்பை
செலுத்தி, பிறர் நம்மை மதிக்கும் அளவிற்கு நம்மை உயர்த்தும் வள்ளமை
திருமுறைக்கு உண்டு என்பது உறுதி.
திருமுறைகள் தான் அனைத்திற்கும் மூலம்
என்று புகழ் அளவிற்கு இத்திருமுறைகள் நமக்கு உணர்த்தும் பாடம் தான் என்ன என்பதனை
சற்று சிந்தித்தல் அவசியம். நெருப்பில்லாமல் புகையாது என்பது போல் காரணமில்லாமல்
சொல்வதற்கில்லை. அதே வேளை தெளிவில்லாமல் நாம் பேசுவதால் தான் மதமாற்றம், புரியாத சடங்கு முறைகள், பிற மதத்தவனின் கேளிக்கையான பேச்சு.
இதற்கு உதரணமாக சாமியாரும் பூனையும் கதையினை சொல்லாம். முன்பொரு சமயம் ஆசிரமம்
சுவாமி ஒருவர் ஆசிரமத்தில் இருக்கும் எலிகளால் அல்லல் பட்டு கொண்டிருக்க பூனை
ஒன்றை வளர்த்து வந்தார். பூனை வந்ததும் எலி தொல்லைகள் முற்றாக இல்லாமல் போனது.
ஆனால் பூஜை நேரத்தில் பூனையின் தொல்லை இருந்தது. இதற்கு அந்த சுவாமிகள் பூஜை
நேரத்தில் பூனையை கட்டிப் போட்டு விட்டுதான் பூஜைகளை செய்வார். இவ்வறாக பல காலம்
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. பின் சில காலத்தில் சுவாமிகளும் மறைந்துவிட்டார், அவர் வளரத்த பூனையும் மறைந்தது. ஆனால் வழக்கம் மாறவில்லை. சீடர்கள்
சுவாமியின் மறைவிற்கு பின்னும் வேறொரு பூனையை கொண்டு வந்து வைத்து பூஜைகள்
நடத்தினர். இதன் காரணம் சுவாமிகள் ஏன் பூனையை கட்டிப்போட்டு பூஜை செய்தார் என்பதனை
சீடர்களுக்கு சொல்லாமல் மறைந்த விளைவுதான்". இன்று நாம் செய்து வரும் வழிப்பாட்டு
முறைகளும் பூனையை கட்டிப் போட்டு செய்வது போல் அதன் உட்பொருள் யாதென தெரியாமலே
நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கும் போதிக்காமலே போய் கொண்டிருக்கிறோம்.
ஆக மேலே கூறிப்பிட்டவாறு திருமுறை
உணர்த்தும் படிப்பினையை சற்று பார்ப்போம்.
ஒரு இந்துவுக்கு அடையாளம் நெற்றியில்
இருக்கும் திலகமே. அதனால் தான் சைவர்கள் திருநீற்றினை நெற்றி நிறைய பூசி
கொள்கின்றனர். இதனால் முகம் மங்கள தோற்றத்தை தருவதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரவல்லதகிறது. இதனையே தமிழ்ஞானசம்பந்தன்
"மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு...
என்று திருநீற்று பதிக்கத்தில்
திருநீற்றின் பெருமையை பாடியே காட்டியுள்ளார். நாம் தினமும் ஒரு பிடி சாம்பலை உடல்
முழுவதும் பூசி கொண்டலே சறும நோய், தோல் நோய், காய்ச்சல், சூட்டால் வரும் நோய்கள் எல்லாம் பரந்தோடி விடும் என்பதில் ஐயமில்லை.
நமது முன்னோர் காட்டிய வழியை பின்பற்றினாலே போதும் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதே
இல்லை. அடுத்ததாக ஒரு சைவன் என்றால் தனது குருவினை மறத்தல் கூடாது. அதற்கு அவன்
செய்ய வேண்டியது அனுதினம் திருமுறைகளை ஒதுதல் அவசியம். திருமுறைகள் காட்டும்
வாழ்க்கை நெறிகளை பின்பற்றுவது அதிலும் மிக முக்கியமானது.
தொடர்ந்து பார்ப்போமேயானால் கொல்லாமை.
உயிர் கொல்லாமை. திருமூலர் சொல்கிறார்,
"பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே"
மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய
குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே.
ஆயினும் சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும்
சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின்
முனையுமாம்.
அதோடு புலால் மறுதலையும் இங்கு
திருமூலர் வலியுறுத்துகிறார்.
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.
பொல்லாங்கு, கொலையால் செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, 'புலையர்' என்கிறார். புலையர் - கீழ்மக்கள்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை - குறள் 315
என்றவாறு, அருளில்லார், 'அறிவுடையார்' எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். - குறள் 252
என்பதனால் புலால் உண்பவர்
அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் 'உயர்ந்தோர்' எனப்படாது 'இழிந்தோர்' எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்து தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு - குறள் 255
என திருவள்ளுவரும், 'புலால் உண்பவர் நிராயம் புகுந்து மீளார்' என்றார். இரண்டிடத்தும்,
'மீளாமை' என்பதற்கு, 'நெடுங்காலம் கிடத்தல்' என்பதே கருத்து என்க.
இத்திருமந்திரத்தின் விளக்கத்தை ஒரு
வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஆட்டை எப்படி சித்தரவதை செய்து கொன்று உண்கிறோமோ
அது போலவே எம தூதர்கள் நம்மை அரித்துவிடுவர். வாயில்ல ஜிவனை கொன்று நமது பசியை
தீர்த்து கொள்வதால் நாம் பாவ மூட்டைகளை சேகரித்து கொண்டு தான் இருக்கிறோம்.
இந்த உயிர் கொல்லாமையை பற்றி திருமூலர்
மட்டுமல்லாது திருவருட்பிரகாச வள்ளலாரும் தமது முக்கிய கொள்கைகளில் ஒன்றாகவும்
கடைப்பிடித்துள்ளார். மீண்டும் மீண்டும் கொல்லாமையை பற்றி பேசுவதன் நோக்கம்
எல்லாரிடத்திலும் அன்பினை பரப்புதல், அவசியம்.
அன்புசிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
என்று தெளிவுபடுத்துகிறார் மூலர்.
காணும் உயிரினங்கள் அனைத்திலும் அன்பினை செல்லுதிட வேண்டும். சிவம் என்பது வேறு
அன்பு என்பது வேறு என்று பிரித்து பார்க்காதீர். எல்லா இடங்களிலும் முழுமையாக
பரவியுள்ளான் பகை ஒழித்து ஒற்றுமையாய் வாழ கற்றுக் கொடுக்கிறது இத்திருமுறை.
மாணிக்கவாசகரும் "அன்பினில்
விளைந்த ஆராமுதே" என்று அன்பையும் சிவனையும் ஒரிடத்து வேற்றுமைபட
ஒதியுமுள்ளார்.
இதுமட்டுமின்றி ஆலய வழிப்பாட்டிலும்
நமது பங்கு இருத்தல் அவசியமாகிறது. இந்த உடலில் உள்ள அனைத்து அங்கமும் அவனுக்கு
திருப்பணி செய்திடல் வேண்டும் என்று அப்பர் பெருமான் திரஅங்கமாலை என்று
ஒதியுள்ளார்.
" தலையே நீ வணங்காய் தலை மாலை தலைகனிந்து... "
என்று தலை முதல் கால் வரை ஒவ்வொன்றாக
வரிசைப்படுத்தி ஒதினார் என்பது கூறிப்பிடப்பட்டது.
ஆகவே சைவம் என்ற சமயம் சமயமாக
மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய நெறியை சீராக சீர்படுத்தி போதிக்கின்றது.
ஆன்மீகத்தை மட்டும் கொள்ளாமல் காலத்திற்கு ஏற்ற பாடத்தினையும் போதிக்கிறது என்பது
தான் உண்மை. வாழும் காலங்களில் மனிதனுக்கு தேவையானவற்றை எடுத்து கூறுவது சைவ
சித்தாந்தம். பதியாகிய இறைவன் நம்மை எப்படி ஆட்டுகிறான், பசுவாசிய நாம் எப்படி அதற்கு தக்கவாறு ஆடுகிறோம், என்று நம்மை முழுமையாக வரைபடம் போட்டு காண்பிக்கும் அளவிற்கு அன்றே
சொல்லிவிட்டு சென்றனர். இது விஞ்ஞானத்திற்கும்,
மெய்ஞானத்திற்கும் இடையே கிடைத்த அரிய
பொக்கிஷமாகும்.பதிவிற்கும் பசுவிற்கும் இடையே பசுவிற்கு பற்றி கொள்ளும் பாசமாகிய
ஆணவம், கன்மம், மாயை-யை பற்றியவைகளும் நமக்கு
தெரியவருகிறது. இவை மூன்றும் நமக்கு கூற வரும் கருத்து ஒன்றே ஒன்று தான் இறைவனை
அடையும் மார்க்கம் என்ன? பிறவாத வாரமாகிய முக்திக்கான வழியை
கூறுவதுத்தான் அஃது.
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில்
மனிதப்பிறவியினை வரிசைப்படுத்தி கூறுவார்,
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மலமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப்
பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
சொல்ல அ நின்ற இத்தாவரச் சங்கமத்துள் எல்லாப்
பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
இவ்வளவையும் நமது அடியார் பெருமக்கள்
தொழில் நுட்ப கருவிகள் இல்லாமலே ஞானத்தால் திருவாய் மொழிந்தனர் என்பது எத்துணை
பெருமிதம்.
ஆக இச்சமயம் ஒங்கிட நமது பங்கு என்ன?
திருமுறைகளை பரப்புதல் வேண்டும். அதன்
பெருமையை உணர்ந்து யாம் பெரும் இன்பங்களை பகிர்தல் அவசியமே. ஆலயங்களில் தேவையற்ற
பேச்சுக்களை பேசுவது தவிர்த்து திருமுறைகளை ஒதிட முயற்சிக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு சடங்கு முறைகளின் விளக்கத்தை விளக்க வேண்டும். எல்லா காரியங்களிலும்
திருமுறை பாராயணம் செய்து துவங்குதல் வேண்டும்.
திருமுறைகளை, திருப்புகழை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் இணைத்து பழக்கப்படுத்தி
கொண்டால் அது நாளடைவில் வழக்கமாகி விடும் என்பதில் ஐயமில்லை. சமையலுக்கு உப்பு
எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு திருமுறைகளும் நமது வாழ்க்கைக்கு அவசியம்.
இதனால் கெடுவாரும் இல்லை கேடுவிளைவிப்போரும் இல்லை.
இறுதியாக திருமுறையை ஒதி உய்வு
பெருவோமாக. சிவாய திருச்சிற்றம்பலம்
நல்ல முயற்சி ,உங்கள் பனி தொடரட்டும் சகோ ...
ReplyDeleteNandri tholare
Delete