இன்று நாட்டையே பயத்தில் ஆழ்த்தி
கொண்டு பரவலாக பரவி கொண்டு வரும் உயிர்க் கொள்ளியான இணையத்தள விளையாட்டு நீல
திமிங்கிலம். இளைஞர்களையும், குழந்தைகளையும் தற்கொலைக்கு துண்டும்
அதிபயங்கரமான விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 சவால்களை கொண்டது. இதை விளையாடுவோர்
ஒவ்வொரு சவால்களையும் நிறுத்தாமல் தொடர்ந்து கட்டாயமாக விளையாடிட வேண்டும் என்பது
இதன் விதிமுறைகளில் ஒன்று. இவ்விளையாட்டு பெற்றோரின் கவனிப்பு குறைந்தவர்களையும், அன்புக்காக ஏங்கி கொண்டிருப்போரையுமே தாக்கி விளையாட செய்யும்.
இனி இந்த விளையாட்டைப் பற்றி விரிவாக
பார்ப்போம். இந்த விளையாட்டு, dowloadable
game, application and software இல்லை. இவை ரகசியமாக பரவி வரும் குழுமங்களின் வழி விளையாடப்படுபவை.
இவ்விளையாட்டின் துவக்கமாக russian social
media network -ல் முதன் முதலில் கண்டறியப்பட்டதாக ஒரு
கட்டுரை நமக்கு சான்றாக கிடைப்பெறுகிறது. இதில் 50 சவால்கள் அடங்கியிருக்கும். அவற்றில்
அதிகாலை 4:20 எழுந்து பேய் படம் பார்ப்பதும்,
கைகளை அறுத்து கொள்வது, குடும்பம் நண்பர்களிடமிருந்து தனித்திருப்பது, மலை உச்சியிலிருந்து தற்கொலை முற்ப்படுவதுமாகவே இதன் சவால்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு சவால்களுக்கு பிறகும் சவால்களை நிறைவேற்றியதற்கான சான்றுகளை
காண்பிக்கும் வகையில் படம்பிடித்து பதிவேற்றம் செய்தல் அவசியம்.
இந்த விளையாட்டில் பங்கு கொள்வதற்கு
முன்பதாக நம்மை பற்றிய தகவல்களை பற்றி முழுமையாக நம்மிடமிருந்து பெற்று கொள்ளும்.
அதன் பின்னர் தான் நமக்கு ஒவ்வொரு சவால்களாக கொடுக்கப்படும். இதன் நோக்கமே
நம்முடைய மரணம். இதில் இருக்கும் சவால்களை பூர்த்தி செய்ய முடியாது நாம் பின்
தங்கினால் நம்மை பற்றிய விஷயங்களை காட்டி பயமுறுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு ஆய்வின் கீழ் வெளிவந்த தகவலின் படி நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலையில்
ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.
நம்மை சுற்றியிருக்கும் சிறுவர்களோ, தம்பி தங்கைகளோ, நண்பர்களோ இந்த விளையாட்டில்
ஈடுப்பட்டுள்ளனர் என்பதை நாம் எப்படி அறிந்து அவர்களை அதிலிருந்து மீட்டு வருவது?
உங்களோடு சேர்ந்து இருப்போர்களின் மீது
உங்கள் கவனத்தை செலுத்துங்கள். அவர்களின் நடவடிக்கையின் மீது சந்தேகியுங்கள்.
தனிமையிலிருப்பது, உடலில் வெட்டு காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பது போன்றவையை
கண்காணியுங்கள். அப்படி இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே காவல்
அதிகாரியிடம் புகார் கொடுப்பதும், மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனைகள்
பெறுவதும் சிறந்த தீர்வுகளாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது
அதிக கண்காணிப்பு கொள்வது அவசியம். பிள்ளைகள் இந்த விளையாட்டில் அதிகமான கவனத்தை
செலுத்துகின்றனரா என்பதை கண்காணிப்பது மிகவும் முக்கியம். அப்படி அவர்கள்
மீது உள்ள சந்தேகம் உறுதியானால் வீட்டில்
உள்ள இணையத்தள இணைப்பை ரத்து செய்யுங்கள். அவர்களை அந்த விளையாட்டின்
தக்கத்திலிருந்து மீட்க முயற்சியுங்கள்.
2015 - ஆம் ஆண்டு இந்த விளையாட்டை
கண்டு பிடித்த நபர் பிடிப்பட்டார். அவரை விசரித்த போது அவர் சொன்னதாவது, "இந்த உலகை தூய்ம்மைப் படுத்துவது தான் என் நோக்கமாகும்"
என்றார்.
இறுதியாக இப்பதிவின் வழி கூற
வருவது என்னவென்றால் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை தத்தம் கவனிப்பிலிருந்து விடுப்படமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுதல்
வேண்டும். இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுப்படாமல் இருக்க நம்மை நாம் தயார்
செய்து கொள்ள வேண்டும். நமக்கு பயனலிக்கும் வகையிலான காரியங்களுக்கு அதிக
முக்கியத்துவம் தர வேண்டும். இதுவே சரியான தீர்வாகும்.
No comments:
Post a Comment