சமிபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணோலியை கண்டு வேதனைக்குள்ளானேன். அது என்ன காணோலி என்றால் ஒரு சிறுவன் சுமார் பத்து முதல் பதினொரு வயது மட்டுமே ஆகியிருக்கும். மது அருந்தி கொண்டு சுருட்டு பிடித்து கொண்டு முனிஸ்வரர் போல் ஆட்டம் போட்டு கொண்டும் கூச்சலிட்டு கொண்டு இருப்பது போல் இந்த காணோலி அமைந்தது.
ஒரு நிமிடம் நாம் சற்று அறிவுமிக்கவர்களாகவும் சமயத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்து சிந்தித்து பார்ப்போம். நமது சமயம் சீர்கெடுவதற்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் முதற் காரணமா அல்லது இது போன்ற காரியங்கள் நடைபெறும் போது வேடிக்கை பார்த்து கொண்டும் அச்சிறுவனுக்கு ஊக்குவித்து கொண்டிருந்தவர்கள் போன்ற நமது சமயத்தை சார்ந்தோர் காராணமா? பிற மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதத்தை ஈழிவுபடுத்திவிட்டால் கொதித்து எழும் நாம் ஏன் எட்டப்பனாக இருந்து வேளை செய்வோர் மீது எந்த கோபமடைவதில்லை?
உயர்ந்த லட்சிய கனவுகளை சுமந்து செல்லக் கூடிய வயதில் இப்படி இந்துகளுக்கு பிற மதத்தினர் இகழ்ந்து பேசும் வாய்ப்பினை நாமே உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறோம். குழந்தையின் வடிவில் தெய்வத்தை காணுங்கள் என்று நமது சமயம் தான் சொல்லியுள்ளது. அதனை ஒரு காரணத்தோடு தான் சொல்லியிருக்கின்றனர். பிறந்து பல படிநிலைகளை கடந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நாம் தான் ஒரு உதாரணமாக அமைய வேண்டும். ஆனால், இந்த காணோலிக்கு எதிர் காணொலியாக மற்றுமொரு காணொலியையும் நான் பார்த்தேன். அது என்னவென்றால் அதே முனிஸ்வரர் ஆட்டத்தை இல்லத்திலே பயிற்சி செய்வதாக அந்த காணொலி அமைந்துள்ளது. இன்றைய குழந்தைகளது அனிவு திறனானது காந்தத்தை போன்று அதி வேகமாக ஒரு விஷயத்தை பற்றி கொள்வதாகும். அது மட்டுமல்லாது கரப்பனை திறனை தங்களுக்குள் அதிகமாக வைத்திருக்கும் ஆற்றல் மிக்கவர்கள். எதை அவர்கள் பார்க்கின்றனரோ அதுவாகவே ஆக விருப்பம் கொள்கின்றனர். நாம் எவ்வழியிலான போதனைகளை வழங்குகிறோமோ அதையே அவர்கள் பின் பற்றுகின்றனர். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சமம்.
கவிஞர் கண்ணதாசன் சொன்னதை போன்று எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளுக்கு ஒப்ப பெற்றோர்களது வளர்ப்பிலும் அரவணைப்பிலுமே உள்ளது. விஞ்ஞானத்தை இன்று மிற வைத்து கொண்டிருக்கும் அதிசயத்தை கொண்டிருக்கும் நமது இந்து மதம், நமக்கு பலவற்றை போதித்திருந்தும் நாம் அவற்றை பின்பற்றது இன்னும் கிணற்று தவளையாகவே இருந்து வருவதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. சிந்தனை மாற்றம் நம்மிடையே வந்தால் மட்டுமே நாம் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை தொடர முடியும். நாடு தழுவிய அளவிளே நடைபெற்று கொண்டிருக்கும் பல போட்டிகளில் நமது இந்திய மாணவர்களது சாதனைகளை காணும் போது வார்த்தைகளில் அடக்கி வைக்க முடியாத அளவிலான ஆனந்தம் பிறக்கிறது.
நல்ல சிந்தனைகளை விதைப்போம் நமது மாணவ சமுதாயத்திடம். எதை இன்று நாம் விதைக்கிறோமோ அதையே வருங்காலத்தில் அறுவடையும் செய்யப் போகிறோம். மாறுவோம் மாற்றுவோம்.
அருமை 👌
ReplyDelete