சமீப காலமாக வலைத்தளங்களில் இந்து சமயத்தை குறித்து அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தும் கணோலி அதிகமாக பரவி வருவதை நான் கண்டேன். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த திராவிட கழகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களுடைய பதிவுகளே, அதிகமாக காணப்பட்டு வருகிறது. ஒரு புறம், பக்தி மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒருவர் இந்து சமயத்திற்கு இன்னல் விளைவித்து கொண்டு வருகிறார்; மற்றொரு புறம், இறைவனையே தூற்றி பேசுவார் பின்னர் அவரையே எங்களது பாட்டன், அவனன்றி எதுவும் இல்லை என்று நா கூசாமல் பேசுவார் ஒருவர்.
இவர்களையெல்லாம் கடந்து ஆதி மூலன் ஒருவனை தவிர மற்றவர் எல்லாம் சிறு தெய்வத்திற்கு சமமானவர் என்றும் சொல்வர். திருமுறைகள் தான் எங்கள் வாழ்வு என்பர். பிறகு நால்வர் காட்டிய வழியை மட்டுமே பின்பற்றுவோம் என்பார். இவர்களது பேச்சை கேட்க இருக்கு ஆனால் இல்லை, என்ற விதாண்ட வாத பேச்சுக்கு ஒப்பாக அமைந்துள்ளது.
திருமுறைகளை சைவ சமயத்தில் சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாக பிரித்து நமக்கு அருளியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், சக்தி, பெருமாள் என சன்மத கோட்பாட்டிற்கு இணங்கிய வண்ணம் தெய்வங்களை குறிப்பிட்டு அருளாளர் பெருமான்கள் நமக்கு அருளியுள்ளனர். அதை மறுக்க இயலுமா?
பரம்பொருள் என்பவர் ஒருவர்தான் என்ற கருத்தை கட்டாயம் எடுத்து கொள்ளத் தான் வேண்டும். ஆயினும், அவரவருடைய நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பதிய வேண்டாம் என்பதே என்னுடை வேண்டுகோள் ஆகும். நமக்குள் நாமே தெய்வங்களை பிரித்து சண்டை போடுவதற்கு இது சோழர்கள் காலம் அல்ல. உலகம் நவீன மயமாகி போய் கொண்டிருப்பதை சற்று சிந்திக்கவும் வேண்டுமே என்றுதான் சொல்கிறேன். எம்முடைய இப்பதிவு யார் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக இல்லை.
நமது நாட்டில் அவ்வப்போது எழக் கூடிய மதமாற்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் சமய அறிவு குன்றியிரக்கும் பாமர மக்களிடத்தில் குழப்பத்தை உண்டு செய்வது தவறு என்ற என்னுடைய தரப்பு கருத்தை பதிக்கிறேன். அதுமட்டுமல்லாது நாம் ஒரு இந்துவாக, சனதன தர்மத்தை கைப்பற்றியிருக்கும் சைவராக, வைஷ்ணவராக தாழ்மையோடு கேட்டு கொள்வது என்னவென்றால், சமூக வளைத்தலஙகளில் நம்முடைய சமயத்தை குறித்து வெளிவரும் அவதூறான காணொலி மற்றும் கருத்துக்களை பகிராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காரணம் பல்லின மக்களும் உலாவி வரும் இந்த சமூக வளைத்தலத்தில் நம்முடைய சீர்கெடுவது குறித்த பதிவுகளால் நமக்கு நாமே அவலநிலையை கொண்டுவருவதற்கு சமானமாக அமைகிறது. ஆகவே வேண்டி கேட்பது ஒன்றே ஒன்று தான், நல்ல பதிவுகளையும், பயன்மிக்க கருத்துக்களையும் பதிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.
விருச்சத்தின் நிழலில்,
விக்ரமன் பொன்ரங்கம்
இன்று நாம் விதைக்கும் ஒவ்வொரு விதைகளுக்குள்ளும் ஒரு விருச்சம் உள்ளது. சமயத்தோடும் தமிழோடும் எனது பணி இங்கிருந்து துவக்கம் ஆகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை
வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...
-
வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...
-
இந்து சமயம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து சமயத்திற்கு வேதநெறி என்றும் பெயர் உண்டு. இந்து சமயத்தின் அடிப்படை நூல் வேதம். ...
-
பகுதி ஒன்றில் நாம் இல்ல வழிபாடு செய்வதால் விளையும் பயன் யாது என்பதனை ஒரு குட்டி கதையோடு மேலோட்டமாக பார்த்தோம் . இனி இல்ல வழிபாட்டில் செ...
No comments:
Post a Comment