Wednesday, 29 April 2020

எப்போது விடியும் இந்த பொழுது?



விஞ்ஞானத்திற்க்கும் மெய்ஞ்ஞானத்திற்க்கும் மேலாக பல அதிசய மிக்க செயல்களை செய்து வந்த இந்த ஆறாறிவு கொண்ட ஆறடி உயரம் கொண்ட அழகுமிக்கவரும், சிந்தித்து செயலாற்றிட கூடிய அறிவு மிக்கவரும், எதிர்காலத்தை இன்றே கணித்து குறிப்பீடுபவரும், பலமிக்கவரும், கோபத்தின் உச்சியை எட்டியவரும், அதே உச்சத்திலிருந்து தன்னை பச்சிலங் குழந்தையை போல் உடனே மாற்றிக் கொள்ளக் கூடிய சுபவமிக்க வேடதாறியும், பல திறமைகளை தனக்குள்ளே வைத்து கொண்டு ஒய்யரமாய் இருப்பவரும், ஒரு சமுதாயத்தை தம்முடைய சொல் கட்டுக்குள் வைத்திருப்போரும்,

வாழ்வில் குறைநிறைகளை சந்தித்தவரும், நேற்று இன்று நாளை என பல தலைமுறையை சந்தித்தவரும் மலையே புரண்டு வந்தாலும் வீழ்த்திடலாம் என்ற அஞ்ச நெஞ்சத்தோடு வீர வசனஙகள் பேசியோரும் இன்று கண்ணுக்கே தெரியாத உயிரினங்களின் உயரத்தை எட்டாத கிருமியாம் அதனை எண்ணி வீட்டில் தன்னை தானே சிறைப்படுத்தி கொண்டிருக்கிறான் மனிதன் என்ற மானுட பிறவி. இன்று அவன் கூண்டில் அடைத்து வைத்த பறவை, கட்டிப் போட்ட நாய், சிறையிட்ட மற்ற உயிரினங்கள் யாவும் அவனை நோக்கி கேளிச் செய்து சிரிகின்றன. மனிதன் தலைகுனிந்த நிலையில் உள்ளான். அவன் செய்த தவறுகள் யாவற்றையும் கண்களுக்கு முன்பதாக திரையிட்டு பார்க்கிறான். வேதனையில் மெலுகாய் உருகி போகிறான்.

மனையாளின் என்ற தாயின் இல்லதரசியின் துயரை இ்ன்று சமமாக பங்கிட்டு கொள்கிறார்கள் தந்தையும் பிள்ளைகளும். இந்த சமுகத்தில் நிழலுக்கு ஒதுங்கி மீண்டும் இந்த சமூகத்தோடு சேர்ந்து இந்த நாட்டின் வளர்ச்சி சிறக்க பாடுப்பட, இல்லதரசி மட்டும் வீடு என்ற கோட்டைக்குள் எங்கும் வெளியே செல்லாமல் தினம் தினம் சிறைவாசம் செய்து வருவதன் துயர் இப்பொழுது தான் ஆணினத்திற்கு, மற்றும் அவர்தம் பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கிறது. தூதுவனுக்கு இப்பொழதுதான் செய்தியை கொண்டு வந்து சேர்க்க முடிந்ததோ.
தந்தை தாயின் அரவணைப்புக்காக ஏங்கி நின்ற பிள்ளைகளுக்கு சோதிடன் சொல்வது போல் இது ஒரு பொன்னான காலம். அவர்களை போல் காலமெல்லாம் உழைத்து இன்றாவது என் மக்கள் என்னிடத்தில் ஒரு வார்தையை உதிர்த்து விட மாட்டாரா என்று நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு போக எம தூதன் அடிக்கடி அழைப்பதை நினைவு செய்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் மழலை வாழ்விற்கே சென்று கொண்டிருக்கும் பெற்றோர்களது ஏக்கமும் இன்று தெரியவந்துள்ளது அதே தூதுவனால்.

பொழுது போகமலே இருப்பதற்கு இவ்வளவு நாட்கள் தான் செய்த நல்லது என்ன உண்டு தீயது எவ்வளவு உண்டு என்று குறிப்பு எழுதிட இப்பொழுதுதான் நேரம் கிடைத்துள்ளது. இந்த தருணத்திலும் மனிதருக்கு பிறரை குறைப் பேகவும் மனம் திடமாகவே உள்ளது. இப்போதாவது திருந்திடாத இந்த ஜன்மம். ஏழை என்று ஒரு இனமே உண்டு என்று தெரியாதவருக்கும் அவர்கள் படும் துயர் தெரிகிறது. இனி இந்த நிலை மாறிட வேண்ணும் என்று உள்ளம் பாரதி போல் கொதித்து எழுகிறது. பிள்ளைகளின் தேவை என்ன? பெற்றோருடைய அன்றாட பிரார்த்தனை என்ன ? என்ற கேள்விகளுக்கு இந்த நாளில் தான் விடை கிடைக்கும் என்று இனைவனுடைய தீர்ப்பன்றோ.

அவரவர் குடும்பத்தில் அவரவருக்கு எந்த நிலையில் மரியாதை உண்டு, பயம் உண்டு, பாசம் உண்டு என்பதனை அறிந்திட இதுவே தருணமாகவும் உள்ளது. பேச நினைத்தவையெல்லாம் இப்பொழுது தான் பேச துவங்கப்பட்டுள்ளது. பயத்தில் மறைத்து வைத்திருந்தவைகள் எல்லாம் அம்பலத்தில் ஏற்றிடவும் அதனால் கோபமில்லாது பாச வலையால் திருத்திட செய்வதும் இப்போது தான் நடந்திட சித்திக்கப்பட்டதோ? மனிதன் மனிதநேயத்தோடு வாழத்தானே இறைவனும் ஆசை கொண்டான். காலமெல்லாம் கனவும் கண்டான். ஆனால் மனிதன் அவன் சொன்னதை கேட்க மறுத்தான். தண்டனை என்ற பெயரில் திருந்திட இதோ ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளான்.

கிடைக்கப் பெற்ற நேரத்தை கொண்டு தாயோடு, மனையாளோடு, சமைக்க பழகிக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு பள்ளி பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசிக்க பழகுங்கள். மாலை நேரங்களிலே தேனீர் விருந்தோடு இனிய கானங்களை கேளுங்கள். குடும்பத்தோடு விளையாடி மகிழுங்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் ஒன்றாக பிரார்த்தனை செய்யுங்கள். செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கோருங்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பாரட்டிக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.

பள்ளிகள் யாவும் அடைப்பட்டிருக்கலாம். ஆனால் இல்லம் என்ற பள்ளியறையில் பாடம் கற்றுக் கொள்ள இதுதான் தருணம். வயதை காட்டி பெரியவர் சிறியவர் என்ற பேதம் வேண்டாம். எல்லோரையும் சமநிலை படுத்தி பாருங்கள். உங்களிடத்தில் இன்றைய தேவைக்கு மேல் மிச்சமாக இருந்தால் இல்லாதவருக்கு கொடுங்கள். இன்று நீங்கள் கொடுப்பது நஷ்டம் அடைவதற்காக அல்ல, சேமிப்பிற்காக என்று உணருங்கள். ஒவ்வொருத்தருடைய ஏக்கங்களையும் பூர்த்தி செய்திட முன்வாருங்கள். இளம் பிராயத்து நண்பர்களோடு மனம் விட்டு பேசுங்கள். அன்றாடம் பார்க்கும் விஷயங்களின் அழகை ரசியுங்கள் குறைகள் புலப்படாது.

இனி கூண்டில் அடைக்கப்பட்ட மிருகங்களாய் இல்லாது மனிதனாக, அன்புமிக்கவனாக, அறத்தின் பால் செல்பவனாக, வாழவோம். அதுவரை வீட்டிலேயே பத்திரமாக இருப்போம். பொழுது விடியும் வரை காத்திருப்போம். 


No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...