Friday, 9 November 2018

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article 2


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

கந்த சஷ்டி விரததின் மறு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதோடு முருகனின் திருவருள் கிட்டி வாழ பிராத்திக்கிறோம்.
இப்பதிவில் கந்த சஷ்டி விரதத்தின் பலன் யாதென்பதை காண்போமாக.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
கந்தனுண்டு கவலையில்லை, குகனுண்டு குறைவில்லை என்பர்.

ஆக கந்த வேலை உருகி இந்த கந்த சஷ்டி விரத்தினை அனுஷ்டிப்பதால் நம்மை சுற்றியிருக்கும் தீமைகள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வில் உய்வடைவோம் என்பதுவே இவ்விரத்தின் முக்கிய அம்சமாகும். இவ்விரத்தை சுட்டி காட்டி நமது முன்னோர்கள் அருள் மொழியாக பழமொழியினையும் நமக்கு சொல்லி சென்றுள்ளனர் என்பது கூறிப்பிட தக்கது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும் என்று. அதாவது கந்த சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பபையில் குழந்தை என்னும் செல்வம் என்பது வரும்.

அதுமட்டுமல்லாது, நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கு நவக்கிரக தோஷங்கள், மரண பயம், வறுமை, தீராத உடல் நோய் யாவையும் தீர்க்கவல்ல அற்புதம் நிறைந்த விரதமே கந்த சஷ்டி விரதமாகும்.
திருமுருக கிருபனந்த சுவாமிகள் எப்பொழுதும் முருகனை ஒரு வாசகத்தில் பின்வருமாறு சுட்டி காட்டுவார்கள் "கேட்ட போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் பன்னிரு கரங்களினால் வாரி தரும் வள்ளல் முருகப்பெருமான். அப்படி வாரி வழங்கும் வள்ளலுக்கு ஏற்ற மனைவியாம் வள்ளி. அதனாலேயே அவர்கள் வள்ளல் வள்ளி என அன்போடு அழைக்கப்படுகிறர்".
துன்பங்கள் சூழ்ந்து கொண்டு கண்ணை இருட்டிக்கும் போது துணையாக ஒரு தேடல் வேண்டும் என்றால் அழைப்பின்றி வருபவன் முருகன்.
அதனையே அருணகிரிநாதர் பாடுகிறார்

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் 
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.  

என்று முருகப்பெருமானின் தனிப்பெரும் கருணையினை விளக்குகிறார். அதிலும் வள்ளியென்னும் மானுட பெண்ணின் மீது முருகன் வைத்திருக்கும் காதலினை அருணகிரி அழகாக வெளிப்படுத்துகிறார். நம்மில் ஒரு அங்கமாக இருக்கும் வள்ளி அம்மையார் மீதுள்ள பக்தியினை பல பாடல்களிலும் அருணகிரிநாதர் வெளிப்படுத்துகிறார். எடுத்துகாட்டாக,

பாதி மதி நதி போது மணிசடை 
                            நாத ரருளிய .... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் 
                                 பாதம் வருடிய ... மணவாளா

என்று சிவப்பெருமானின் நெற்றி கண்ணிலிருந்து உதிதெழுந்த முருகன் வள்ளி என்ற மானுட குறத்தியின் காலை வருடி விடுகிறார் என அழகு தமிழில் சுவை குறையாது சொல்லியுள்ளார். ஆக நமக்கு துன்பம் வந்தாலும் அவற்றை தனதாக்கி காப்பாவன் முருகன் என்பதுவே இதன் பொருளாக கொள்ளலாம்.

மேலும் அடுத்த பதிவினில் கந்த சஷ்டி விரதத்திற்கு மூலமாக இருக்கும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பினை காண்போமாக.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...