Friday, 24 May 2019

விழித்தெழுவோம்


சமிபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணோலியை கண்டு வேதனைக்குள்ளானேன். அது என்ன காணோலி என்றால் ஒரு சிறுவன் சுமார் பத்து முதல் பதினொரு வயது மட்டுமே ஆகியிருக்கும். மது அருந்தி கொண்டு சுருட்டு பிடித்து கொண்டு முனிஸ்வரர் போல் ஆட்டம் போட்டு கொண்டும் கூச்சலிட்டு கொண்டு இருப்பது போல் இந்த காணோலி அமைந்தது. 

ஒரு நிமிடம் நாம் சற்று அறிவுமிக்கவர்களாகவும் சமயத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்து சிந்தித்து பார்ப்போம். நமது சமயம் சீர்கெடுவதற்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் முதற் காரணமா அல்லது இது போன்ற காரியங்கள் நடைபெறும் போது வேடிக்கை பார்த்து கொண்டும் அச்சிறுவனுக்கு ஊக்குவித்து கொண்டிருந்தவர்கள் போன்ற நமது சமயத்தை சார்ந்தோர் காராணமா? பிற மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதத்தை ஈழிவுபடுத்திவிட்டால் கொதித்து எழும் நாம் ஏன் எட்டப்பனாக இருந்து வேளை செய்வோர் மீது எந்த கோபமடைவதில்லை? 

உயர்ந்த லட்சிய கனவுகளை சுமந்து செல்லக் கூடிய வயதில் இப்படி இந்துகளுக்கு பிற மதத்தினர் இகழ்ந்து பேசும் வாய்ப்பினை நாமே உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறோம். குழந்தையின் வடிவில் தெய்வத்தை காணுங்கள் என்று நமது சமயம் தான் சொல்லியுள்ளது. அதனை ஒரு காரணத்தோடு தான் சொல்லியிருக்கின்றனர். பிறந்து பல படிநிலைகளை கடந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நாம் தான் ஒரு உதாரணமாக அமைய வேண்டும். ஆனால், இந்த காணோலிக்கு எதிர் காணொலியாக மற்றுமொரு காணொலியையும் நான் பார்த்தேன். அது என்னவென்றால் அதே முனிஸ்வரர் ஆட்டத்தை இல்லத்திலே பயிற்சி செய்வதாக  அந்த காணொலி அமைந்துள்ளது. இன்றைய குழந்தைகளது அனிவு திறனானது காந்தத்தை போன்று அதி வேகமாக ஒரு விஷயத்தை பற்றி கொள்வதாகும். அது மட்டுமல்லாது கரப்பனை திறனை தங்களுக்குள் அதிகமாக வைத்திருக்கும் ஆற்றல் மிக்கவர்கள். எதை அவர்கள் பார்க்கின்றனரோ அதுவாகவே ஆக விருப்பம் கொள்கின்றனர். நாம் எவ்வழியிலான போதனைகளை வழங்குகிறோமோ அதையே அவர்கள் பின் பற்றுகின்றனர். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சமம். 

கவிஞர் கண்ணதாசன் சொன்னதை போன்று எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளுக்கு ஒப்ப பெற்றோர்களது வளர்ப்பிலும் அரவணைப்பிலுமே உள்ளது. விஞ்ஞானத்தை இன்று மிற வைத்து கொண்டிருக்கும் அதிசயத்தை கொண்டிருக்கும் நமது இந்து மதம், நமக்கு பலவற்றை போதித்திருந்தும் நாம் அவற்றை பின்பற்றது இன்னும் கிணற்று தவளையாகவே இருந்து வருவதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. சிந்தனை மாற்றம் நம்மிடையே வந்தால் மட்டுமே நாம் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை தொடர முடியும். நாடு தழுவிய அளவிளே நடைபெற்று கொண்டிருக்கும் பல போட்டிகளில் நமது இந்திய மாணவர்களது சாதனைகளை காணும் போது வார்த்தைகளில் அடக்கி வைக்க முடியாத அளவிலான ஆனந்தம் பிறக்கிறது. 

நல்ல சிந்தனைகளை விதைப்போம் நமது மாணவ சமுதாயத்திடம். எதை இன்று நாம் விதைக்கிறோமோ அதையே வருங்காலத்தில் அறுவடையும் செய்யப் போகிறோம். மாறுவோம் மாற்றுவோம்.

Monday, 19 November 2018

Is poverty a mess?


For a few hours with lovable relationships,

In today's time, many of us do not seem to be progressive because of the poor. It is rare for us to see how high our people are, even if the state of the country is raising them up and giving them opportunities.

Dr. APJ Abdul Kalam will surrender from the curse of poverty with a weapon of education to comply with their vote. But in the hands of the knowledge of the knowledge we are not going to know somewhere. The consequences of our society are going to be guilty. According to a recently published survey, from 55% percent of SPM students 44% of Indian students in the SPM exams getting a good result.

In fact, 13% of Indian students stop studying at primary school. At secondary school, 8% of students leave school in half. Only 4.5% of Indian students apply for higher education.

Guys, we need to raise the burden of those who are below us when we rise to the education of the education. We're still in the lowest position today because we're going on what's going on. We're just talking about the shortcomings. Dr. APJ Abdul Kalam, as they say, has been allocated to one side of the pages of history for everyone born in this world. But it is in our hands to read the world that page.
During creation, God did not create anyone in the sense of money, position, and nobleman. By the time their work is done by knowledge and knowledge. If you are rich or poor, you will be hungry if you eat it. It's like dreaming to be in everyone. We must try to achieve that.

A message from Saint Thiruvalluvar is the same,
If one is born (in this world), one had better shine forth with fame; it is better that one, who does not have fame, is not born, than be born.

Again in a good time ...
Vickraman Ponrangam


Friday, 9 November 2018

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article 2


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

கந்த சஷ்டி விரததின் மறு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதோடு முருகனின் திருவருள் கிட்டி வாழ பிராத்திக்கிறோம்.
இப்பதிவில் கந்த சஷ்டி விரதத்தின் பலன் யாதென்பதை காண்போமாக.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
கந்தனுண்டு கவலையில்லை, குகனுண்டு குறைவில்லை என்பர்.

ஆக கந்த வேலை உருகி இந்த கந்த சஷ்டி விரத்தினை அனுஷ்டிப்பதால் நம்மை சுற்றியிருக்கும் தீமைகள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வில் உய்வடைவோம் என்பதுவே இவ்விரத்தின் முக்கிய அம்சமாகும். இவ்விரத்தை சுட்டி காட்டி நமது முன்னோர்கள் அருள் மொழியாக பழமொழியினையும் நமக்கு சொல்லி சென்றுள்ளனர் என்பது கூறிப்பிட தக்கது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும் என்று. அதாவது கந்த சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பபையில் குழந்தை என்னும் செல்வம் என்பது வரும்.

அதுமட்டுமல்லாது, நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கு நவக்கிரக தோஷங்கள், மரண பயம், வறுமை, தீராத உடல் நோய் யாவையும் தீர்க்கவல்ல அற்புதம் நிறைந்த விரதமே கந்த சஷ்டி விரதமாகும்.
திருமுருக கிருபனந்த சுவாமிகள் எப்பொழுதும் முருகனை ஒரு வாசகத்தில் பின்வருமாறு சுட்டி காட்டுவார்கள் "கேட்ட போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் பன்னிரு கரங்களினால் வாரி தரும் வள்ளல் முருகப்பெருமான். அப்படி வாரி வழங்கும் வள்ளலுக்கு ஏற்ற மனைவியாம் வள்ளி. அதனாலேயே அவர்கள் வள்ளல் வள்ளி என அன்போடு அழைக்கப்படுகிறர்".
துன்பங்கள் சூழ்ந்து கொண்டு கண்ணை இருட்டிக்கும் போது துணையாக ஒரு தேடல் வேண்டும் என்றால் அழைப்பின்றி வருபவன் முருகன்.
அதனையே அருணகிரிநாதர் பாடுகிறார்

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் 
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.  

என்று முருகப்பெருமானின் தனிப்பெரும் கருணையினை விளக்குகிறார். அதிலும் வள்ளியென்னும் மானுட பெண்ணின் மீது முருகன் வைத்திருக்கும் காதலினை அருணகிரி அழகாக வெளிப்படுத்துகிறார். நம்மில் ஒரு அங்கமாக இருக்கும் வள்ளி அம்மையார் மீதுள்ள பக்தியினை பல பாடல்களிலும் அருணகிரிநாதர் வெளிப்படுத்துகிறார். எடுத்துகாட்டாக,

பாதி மதி நதி போது மணிசடை 
                            நாத ரருளிய .... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் 
                                 பாதம் வருடிய ... மணவாளா

என்று சிவப்பெருமானின் நெற்றி கண்ணிலிருந்து உதிதெழுந்த முருகன் வள்ளி என்ற மானுட குறத்தியின் காலை வருடி விடுகிறார் என அழகு தமிழில் சுவை குறையாது சொல்லியுள்ளார். ஆக நமக்கு துன்பம் வந்தாலும் அவற்றை தனதாக்கி காப்பாவன் முருகன் என்பதுவே இதன் பொருளாக கொள்ளலாம்.

மேலும் அடுத்த பதிவினில் கந்த சஷ்டி விரதத்திற்கு மூலமாக இருக்கும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பினை காண்போமாக.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

திருமுருக பெருமானின் விழாக்களிலும் சரி விரதங்களிலும் சரி முருகன் அடியார்களுக்கு மிகப் பெரிய பக்தியை தரவல்லது என்றால் அது கந்த சஷ்டி விரதமே ஆகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்விக்கும் உன்னத திருநாளே இந்த கந்த சஷ்டி விரதமாகும். இந்த பதிவில் நான் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கும் முறையினை பற்றி விளக்குகிறேன் பின்னர் தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் இவ்விரதத்தின் மற்றும் பல சுவை மிகுந்த செய்திகளை பகிர்கிறேன்.

பொதுவாகவே கந்த சஷ்டி விழா திருசெந்தூர் முருகன் ஆலயத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாட படுவதோடு சகல முருகன் திருத்தலங்களிலும் ஆறு நாட்களுக்கு விசேஷமாக நடத்துவது வழக்கம். இந்த விரத்தினை அனுஷ்டிப்போர் உண்ண நோன்பினை மேற் கொள்ள வேண்டும் என்பது விரத முறையின் கோட்பாடு. இருப்பினும் முடியாத பட்சத்தில் உள்ளவர்கள் புலால் உண்ணாது மரக்கறி உணவினை உட்கொண்டு கடைப்பிடிப்பது மிக அவசியம். இதுவே விரதத்தின் முதல் கட்டு. கட்டு என்பது நம்மை ஒழுக்க நெறிக்குள் கட்டுப்படுத்தி கொண்டு இருப்பது.

ஒரு கட்டுப்பாட்டுக்குள் நம்மையும் நமது மனத்தினையும் வைக்காவிடில் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை வாழ்வதோடு பல இன்னல்கள் நம்மை சூழ்ந்து கொள்ள நாமே வழிவிட்டதாக போய்விடும். விரத காலங்களில் புலால் உண்ணாதிருக்க வழியுருத்து வதன் முக்கிய நோக்கம் யாதெனில் ஒர் உயிரை கொன்று அதனை புசிப்பதென்பது நமது சமயத்தில் சொல்லப்படாத கூற்றாகும். இது பக்தி நெறிமிக்க ஒரு இந்துவுக்கு பொறுந்தாத ஒன்றாகும்.
ஆக இந்த கந்த சஷ்டி விரதத்தின் போது உடலை வருத்திக் கொண்டு யாரையும் விரதம் இருக்க இறைவன் ஆணையிடவில்லை. இருந்த போதிலும் கந்த சஷ்டி விரதம் மற்ற விரதங்களுக்கு எல்லாம் அப்பால் சற்று மாறுப்பட்டதாகும். இந்த விரத்தினை பல்வேறு வகையாக அனுஷ்டிக்கலாம்.

  • விரதம் துவங்கும் முதல் நாள் காலை பக்தியோடு நீராடி காலையில் பால் பழம் உண்ட பின்னர் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு உணவு ஏதும் இன்றி இருப்பது ஒருவகை விரதம்.
  • பால் பழம் தவிற வேறு ஆகாரம் இன்றி இருப்பது ஒருவகை விரத முறையாகும்.
  • இன்னும் சிலர் மிளகு விரதமும் இருப்பர். முதல் நாள் ஒரு மிளகு சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்துவர், வேறு ஆகாரம் ஏதுமில்லை. பின்னர் இரண்டாம் நாள் இரண்டு மிளகு நீர். இவ்வாறு நாளின் எண்ணிக்கையில் மிளகினை உண்டு தண்ணிர் மட்டுமே அருந்தி விரதம் கடைப்பிடிப்பர்.

இவ்வாறு ஐந்து நாட்களுக்கு விரதம் இருந்து ஆறாவது நாள் கந்த சஷ்டி விரத்தின் போதாவது முடிந்த வரை உண்ணா நோன்பிருப்பது வெகு சிறப்பாகும். மாலையில் சூரன் சம்ஹாரம் செய்த பின்னர் பால் பழத்தினை உட்கொள்வது உகந்தது ஆகும்.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

Monday, 25 June 2018

இல்ல வழிபாட்டில் துவங்கி ஆலயம் வரை (பகுதி 2)


 பகுதி ஒன்றில் நாம் இல்ல வழிபாடு செய்வதால் விளையும் பயன் யாது என்பதனை ஒரு குட்டி கதையோடு மேலோட்டமாக பார்த்தோம். இனி இல்ல வழிபாட்டில் செய்ய வேண்டியவை செய்யக் கூடதவைகள் பற்றி அறிவியல் சார்ந்த விளக்கத்தோடு ஒவ்வொரு பகுதியாக பார்ப்போம்.
இல்லத்தில் நாம் வழிபாடு  செய்ய முதலில் பூஜை அறையென்று ஒன்று தேவையாகும். இந்த அறையை எப்படி அடையாளம் கண்டு நாம் இல்ல வழிபாட்டிற்கு பயன் படுத்துவது என்பதை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். பூஜை அறை என்பது நமது இல்லத்தில் அமைதியை கொடுக்கக் கூடிய சூழலை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அந்த அறை நமது சுய தேவைக்கு பயன்படுத்துவதாக இருக்க கூடாது. இருளான நிறங்களில் இருத்தல் கூடாது. எப்பொழுதும் தூய்ம்மையாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

அதனை தொடர்ந்து, பூஜை அறையில் சுவாமியின் திருவுருவ படங்கள் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். இதன் காரணம், காலையில் நாம் எழுந்து பூஜை செய்யும் போது உதிக்கும் சூரியனின் கதிரலைகள் நம் மீது படியும் போது துவண்டு போயிருக்கும் நரம்புகள், உறுப்புகள் அனைத்திற்கும் புத்துணர்ச்சி பெற செய்வதே இதன் முக்கிய காரணமாகும். பலர் என்ன செய்கின்றனர் என்று பார்த்தால் கடவுளுக்கு சக்தி கிடைக்க வேண்டும் அதனால் தான் நாங்கள் கிழக்கே நின்று மேற்கில் இருக்கும் கடவுளை வழிபடுகிறோம் என்கின்றனர். இங்கே ஒரு விஷயத்தை  நாம் அவசியம் கவனிக்க வேண்டும். நம்மை நோக்கி பாயும் சக்திகள் யாவும் நமக்கு நேராக, குறிப்பாக முகத்திற்கு நேராக படியும் போதே அதன் ஆற்றல் நம்மை சேருகின்றது.


அத்தோடு நமது மூளையை சுறுசுறுப்பாக செயல் படவும் செய்கிறது. ஆக பூஜை அறையில் சுவாமியின் திருவுருவம் கிழக்கில் இருப்பதை உறுதி செய்வது மிக மிக அவசியம். தொடர்ந்து, சுவாமியின் திருவுருவப் படங்கள் தேர்வு செய்யும் போது சாந்தமாகவும், தேவர் தேவியராக (கணவன், மனைவியாக) அல்லது குடும்பத்தோடு இருப்பதாக இருப்பது சிறப்பு. உதாரணமாக, விநாயகர், முருகன் (வள்ளி தெய்வானையோடு, வேலவனாக), மகா விஷ்ணு ( பெருமாளாக, லக்ஷ்மி நாராயணன்), சிவன் பார்வதியாக, போன்று இருப்பதுவே உத்தமம்.


கோரமாகவோ, சமஹாரம் செய்வது போன்றோ இருப்பதை தவிர்ப்பது சிறப்பு. உதாரணமாக, காளி, மஹிஷசூரபத்மினி, நரசிம்மர் சம்ஹாரம் செய்வது போன்று. குல தெய்வத்தின் அடிப்படையில் வழிப்படுவது தவறுகள் ஏதும் இல்லை. ஏன் தெய்வ திருவுருவங்களை தேர்வு செய்து வழிப்பட வேண்டும் என்கிறேன் என்றால், இன்றைய காலத்தில் நமக்குள் இருக்கும் வேளைப்பழு, மன உழைச்சல் போன்றவைகளை குறைக்கவே இதற்கு காரணமாகிறது. சாந்தமாக தினமும் முகம் சுழிக்காது நம்மை பார்த்து அருளும் இறைவனது முகத்தை பார்க்கும் போது நம்முள் ஒரு நம்பிக்கை உருவாகும். இனைவன் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கவும் செய்கிறது.


இதனை விஞ்ஞானிகளும் உறுதி செய்து வருகின்றனர். ஆகவே இறைவனின் நமது இல்லத்தில் இருக்கும் இறைவனது திருவுருவ தேர்வு என்பது மிக மிக அவசியமாகிறது என்பதனை இதன் வழி தெரிவித்து விடைப்பெறுகிறேன் தொடர்ந்து சந்திப்போமாக.

தொடரும்...

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

Sunday, 24 June 2018

இல்ல வழிபாட்டில் துவங்கி ஆலயம் வரை (பகுதி 1)



திருச்சிற்றம்பலம்,

மனிதன் இன்று எவ்வளவு நவீனமாக வாழ்ந்தாலும் அல்லது உயர்ந்தாலும், எதாவது ஒரு கட்டத்தில் இறைவனிடம் தஞ்சம் புகுந்தே ஆக வேண்டும் என்பது இயல்பு. நமது இந்து மதம் என்பது
விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் அடிப்படையாக கொண்டே வழிகாட்டுகிறது. அந்த வகையில் தனி ஒரு மனிதனுக்கு இறை பக்தி சேவை என்பவை முதலில் இல்லத்திலிருந்தே வருகிறது என்பதுவே உண்மை.

மேலே அடியேன் குறிப்பிட்டது போல விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் அடிப்படையாக கொண்டிருக்கும் நமது சமய நெறிகளில் அவ்வப்போது இயற்க்கையையும், அறிவியலையும் சார்ந்தே இல்ல வழிபாட்டினை நாம் செய்கிறோம் என்பதில் நாம் தெளிவாக இருத்தல் வேண்டும். அத்தோடு ஒரு இல்ல வழிபாட்டிற்கு அடிப்படையாக கடைப்பிடிக்க வேண்டியவைகள் யாவை என்பதனையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைய வாழ்வியல் சூழலில் மன அமைதிக்காக எதை எதையெல்லாமோ நாம் செய்து வருகிறோம், பணம் செலவு செய்வதும், நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடத்தில் ஆலோசனைகள் பெற்றும் பலர் தங்களது தினசரி வாழ்வை நடத்தி வருகின்றனர். இங்கே நான் சமிபத்தில் படித்து பிடித்த கதையொன்றை பகிருகிறேன்.
வெளிநாடு ஒன்றில் கணவன் மனைவி இருவரும் அதிகமான சம்பளத்திற்கு வேளை பார்த்து வருகின்றனர். சில காலங்களுக்கு பின்னர், கணவருக்கு தனது தாயரை தன்னுடனே வைத்து பார்க்க ஆசை, தாயார் வெளிநாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தாயரும் இவர்களோடு வந்து வாழ்கிறார்.

கணவனும் மனைவியும் காலையில் வேளைக்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவர். வீடு திரும்பும் நேரத்தில் மனைவி சற்று முன்னதாகவும் கணவன் சற்று தாமதமாகவும் வருவர். இதனை கவனித்து வந்த தாயார் ஒரு சமயம் மகன் வீடு திரும்பிய பின்னர் தாங்கள் தாமதித்து வருவதையும், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பற்றியும் வினவினார். அப்பொழுது மகனும் தன் தாயிடம் எல்லா விஷயங்களையும் எடுத்து கூறினார். தாங்கள் வேளை பார்க்கும் இடத்தில் இருக்கும் வேளைப் பழுவின் காரணத்தால் மருத்துவரிடத்தில் பணம் கொடுத்து ஆலோசனை பெறுவதாக சொன்னார். இதனை கேட்ட தாய் சற்று திடுகிட்டு போக தன் மகனிடம் நாளை வேளை முடிந்தப் பின்னர் நேராக வீட்டிற்கு வருமாறு பணித்தார். மகனும் அவ்வரே செய்தார். தாயார் வீட்டிற்கு திரும்பிய மகனிடத்திலும் மருமகளிடத்திலும் போய் குளித்து வீட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்ப அவ்வாரே அவர்களும் செய்தனர். தாயார் அவர்களது இல்லத்தில் அமைதியாக இருக்கும் ஒரு அறையில் சுடர் விட்டு எரியும் விளக்கினை வைத்து மகனையும் மருமகளையும் சற்று நேரம் தியானித்து இருக்குமாறு சொன்னார்.

இதனை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்த பலன் மருத்துவர் கொடுத்த ஆலோசனையை விட பன்மடங்கு அதிகமான அமைதியை கொடுத்தாக உணர்ந்தனர்.


இக்கதையின் நீதி என்னவென்றால் ஆங்கிலத்தில் சொல்லும் Positive Energy அதிகமாக இருக்கும் போது நம்முள் இருக்கும் மனம் சார்ந்த பிரச்சனைகளிருந்து நாம் நம்மை பாதுகாக்கலாம்.

அதற்கு தான் நமது முன்னோர்கள் இல்லத்தில் Positive Energy நிலவ வேண்டும் என்பதற்காக இல்ல வழிபாட்டினை நமக்கு போதித்தனர்.
ஆக தொடர்ந்து இல்ல வழிபாட்டின் மகத்துவத்தினை பற்றி இப்பகுதியிலே நாம் பார்ப்போம்.

தொடரும்...

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

Thursday, 25 January 2018

அழகன் முருகனும் தைப்பூசத் திருநாளும்; This Article Based on Thaipusam Festival



தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்க வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.”
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரப் பாடல் நமக்கு உணர்த்த வருவது யாதெனில் மனத்தையும், ஐம்புலன்களின் வழியே செல்ல விடாமல் தடை செய்து, கோபத்தை அறவே விடுத்து ஏழைகளுக்கு மனப்பக்குவத்தை பெற்று அவற்றை பின்பற்றினால் ஏழு உலகங்களும் பிழைக்குமாறு கொடிய கோபத்துடன் கூடிய சூரபன்மனுடன் கிரௌஞ்ச மலையும் பிளந்து துகள்பட்டு அழியும்படி கூர்மையான வேலினை விடுத்து அருளிய தனிப்பெருந் தலைவரான திருமுருக பெருமானது திருவருளானது தானாகவே வந்து வெளிப்பட்டு நம்மை ஆட் கொள்ளும்  என்கிறார் அருணகிரியார் இப்பாடலின் மூலம்.
இத்துணை பெருமை தனை தன்னிடத்தே வைத்துக் கொண்டு வேண்டி வருவோருக்கு நன்மைகள் யாவும் செய்து நம்மை எந்த சூழ்நிலையிலும் ஆராதித்து தண்டாயுதபாணியாக காட்சி தரும் தமிழ் கடவுள் முருகனை வர்த்தைகளில் கட்டுப்படுத்த முயற்சிப்பது கடினம். அப்படிப்பட்ட முருகனை நல்லதொரு நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆராதிக்க வேண்டும் என்ற நோக்கில் திருவிழாக்கள் என்ற பெயரில் விழா எடுக்கத் துவங்கினர் நமது முன்னோர்கள். முருகனுக்கு விழா எடுப்பது என்றால் எந்த நாள் சிறப்பாக இருக்கும் என்று சிந்திக்கும் போது நமது முன்னோர்கள் பௌர்ணமி நன்னாளை தேர்வு செய்தனர். அநனால் தான், சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று சித்திர பௌர்ணமி, வைகாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று வைகாசி விசாகம், ஐப்பசியில் கந்தர் சஷ்டி, கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம், தை மாதம் தைப்பூசம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரம், என்று ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முக்கிய திருவிழாக்கள்.
அதிலே நாடு தழுவிய அளவில் எல்லோரும் ஏற்று நடத்தும் திருவிழா, தை மாதம் வரும் பூச நட்ச்சத்திரத்தில் வரும் தைப்பூசம் ஆகும். ஆறுபடை வீடுகளில் பழனி திருத்தலத்தில் இந்த தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தைப்பூச திருநாளை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தினையும் காரணத்தினையும் நாம் அறிந்திடல் வேண்டும். எதையும் காரணமில்லாது நமது முன்னோர்கள் செய்யவில்லை.
புராணம்
கையிலாயத்திலே முருகப் பெருமானுக்கு சக்தி வேல் கொடுத்த நன்னாளே தைப்பூசம். இந்த சக்தி வேலினை சிவப்பெருமான் கொடுக்க, அதிலே அம்பிகையின் ஆற்றல் பூரணமாகியிருக்க முருகப்பெருமான் பக்தி மேலோங்க பெற்று கொள்ளும் நாளாக தான் நாம் தைப்பூசம் கொண்டாடுகிறோம்.
பழனிக்கு வந்த தைப்பூசம்

சூரபத்மனின் குருவாகிய இடும்பன் என்னும் அரசுர குலத்தை சேர்ந்த அரக்கன் முருகப்பெருமான் மீது அளவிட முடியாத பக்தி கொண்டு எப்படி எம்பெருமானை ஆராதிப்பது என்பது தெரியாது குள்ள முனி என்றழைக்கப்படும் அகத்தியரிடம் உதவி நாடிட; அகத்தியரும் அதற்கான வழியை போதிக்கிறார்.
அகத்தியரின் போதனைப்படி இடும்பன் கையிலாயத்திற்கு சென்று சிவகிரி சக்தி கிரி என்ற இரண்டு மலைகளை கவட்டை கம்பு ஒன்றை எடுத்து அதன் இருமுனைகளில் கயிறு கட்டி தோலில் சுமந்து கொண்டு பழனி வந்து சேர்கிறார். இதுவே முருகனுக்கு எடுக்கப்பட்ட முதல் காவடியாகும். இந்த கவட்டை என்ற சொல்லில் இருந்து உருவானதே காவடி என்னும் பெயராகும்.

ஆக பழனியை அடைந்த இடும்பன் முருகனின் ஆணையால் சிவகிரி சக்தி கிரி என்னும் மலைகள் பழனியிலேயே நிலைக்கப்பட்டது. அத்தோடு இடும்பன் முருகனிடம் வரம் ஒன்றை வேண்டுகிறார். என்னைப்போல் உன்னை நாடி காவடி தூக்கி கொண்டு வரும் அடியாருக்கு உன் திருவடியை கொடு என்று. அதற்கு முருகப்பெருமான் இடும்பனுக்கு இரண்டு வரத்தை அருளுகிறார். அவை யாதென்றால், " இனி வரக்கூடிய காலங்களில் உனக்கு முதல் பூஜையும், இரண்டவதாக எனக்கும் பூஜைகள் நடத்தப்படும் என்று இடும்பனுக்கு வரம் நல்கினார் கந்தப்பெருமான்.

தமிழ் கடவுள் முருகன்
முருகனை தமிழ் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன வென்பதனை புரிந்து கொள்வது அவசியமான வொன்று. தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு; முருகனுக்கு விழிகள் பன்னிரண்டு, கரங்கள் பன்னிரெண்டு. மெய் எழுத்துகள் பதினெட்டில் உதித்தது தான் முருகனின் நாமம். அதாவது, மெய்யெழுத்துகளில் உள்ள வல்லினம், மெல்லினம் மற்றும் இடையின எழுத்துக்களை பதம் பிரித்து எடுத்தால் முருகன் அருளுவான்.
மெல்லினம் - ங,,,,,          > மு
இடையினம் - ய,,,,,             > ரு
வல்லினம் - ,,,,,                  > கு
என்னும் வரிசையின் படி முருகு என்ற வார்த்தை உதயமாகிறது. முருகு என்றால் அழகு எனப் பொருள்ப்படும். அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்று பொருள் உண்டு.
இதனாலே முருகன் தமிழ் கடவுள் என அன்போடு அழைக்கப்படுகிறான்.
தைப்பூசத்திலே பிற சிறப்புகள்
திருஞானசம்பந்தரும் தைப்பூசமும்

நால்வர் பெருமக்களில் முதன்மையாக வைத்து போற்றப்படும் திருஞானசம்பந்தருக்கும் இத்தைப்பூச திருநாளுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
திருமயிலாப்புரிலே சிவநேசர் என்ற சிவனடியார் ஒருவர். அவருக்கு பூம்பாவை என்ற தவப்புதல்வி. திருஞானசம்பந்தருக்கு தான் மகளை உரியவள் ஆக்க வேண்டும் என்ற கொள்க்கையில் இருந்தார். ஒருநாள் பாம்பு ஒன்று தீண்டிட பூம்பாவை இறந்து போனால். சிவநேசர் தன் மகளின் உடலை சுட்டு அந்த சாம்பலையாவது திருஞானசம்பந்தரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
சம்பந்தர் தொண்டை நாட்டு யாத்திரையை முடித்து கொண்டு ஒற்றியூரில் சுவாமி தரிசனத்திற்காக வருகையளித்தார். சம்பந்தரின் வருகையை அறிந்த சிவநேசர் பூம்பாவையின் சாம்பலை எடுத்து கொண்டு ஒற்றியூருக்கு வந்து சம்பந்தரை சந்திக்கிறார். நடந்தவை அனைத்தையும் விவரமாக கூறிட சம்ப்பந்தர் சம்பாலையிருக்கும் பெண்ணின் உடலை மீட்க வேண்டி "ஆறாக் காதலினால்" என்ற பதிகத்தை பாடி சாம்பலாயிருந்த பூம்பாவையை உயிர் பெற்று எழுந்திட செய்தார். அந்நாளே தைப்பூசம்.
வடலூர் வள்ளலாரும் தைப்பூசமும்.

வடலூர் வள்ளலார் பெருமான் இறைவனோடு ஜோதியில் ஒன்றினைந்த நாளும் தைப்பூசம் அன்றே ஆகும். நமது உடல் என்பது சூரியன், மனம் என்பது சந்திரன், உயிர் என்பது அக்னியாகும். வடலூரிலே சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் சமயத்திலே அதாவது உடலும் மனமும் ஒன்றாயிருக்கும் சமயம் உயிர் என்ற அக்னியை ஏற்றி வழிப்பாடு செய்யப்படுகிறது இன்று வரை.
வேல்
வேல் என்பது ஞானத்தின் உருவாகும். முருகன் ஞான சக்தி, ஆக அவன் திருக்கரத்தில் இருப்பதுவோ ஞான வேல்.
அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியோடும் செவியாய்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே.
என்று. அதாவது முருகனை பற்றினால் உலக இன்பங்களில் தூங்குபவன் கைகளிலிருந்து விசிறி நழுவுவது போல் நழுவி விடும். முருகன் கைகளில் கதிர்வேல். கதிர் ஒளி வீசும் வேல். அந்த ஒளிப்பட்டால் உலக சிற்றின்ப இருள் அகலும். உய்வதற்குரியது உயிர். அந்த உயிர் நற்கதி பெறவேண்டும். எனவே அவா வினை விடுவாய் என்கிறார் அருணகிரியார். அவா என்றால் ஆசை வினை என்றால் இருவினை. இவை இரண்டையும் விடுவாய் என்று காட்ட இரண்டுமுறை ஒழிவாய் ஒழிவாய் என்றார். அவாவை ஒழி வினைகளை ஒழி இதற்கு முருகன் திருவடியில் மனத்தை வை என்பதுவே இப்பாடலின் அறிவுரை. (விளக்கம் - பொற்கிழி கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம்)

ஆக ஞானத்தை பெற்று விட்டால் ஆசை என்ற மாயையை விட்டு விடலாம் என்பது திண்ணம். அத்தோடு இந்த வேலினை ஞானத்தோடு ஏன் ஒப்பிடுகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.
நமது ஞானம் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அவை ஆழ்ந்து, அகன்று, கூர்ம்மையாகவும் என வகுக்கப்படுகிறது. இதனை யார் நமக்கு தெளிவுபடுத்துகிறார் என்றால் மாணிக்கவாசகர் சிவப்புராணத்திலே அழகு தமிழில் விவரிக்கிறார்.
"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே"
என்று. நமது ஞானம் என்பது ஆழ்ந்த சிந்தனையோடும், அகன்ற அறிவோடும், இறுதியாக கூர்ம்மையை போன்ற தெளிவோடும் இருத்தல் வேண்டும். இதுவே வேலின் தத்துவம்.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
என்று கந்தலரங்காரப்பாடல் நமக்கு வேலின் பெருமையை மேலும் விளக்குகிறது. நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப் பெருமானது புனிதமான மென்மையான திருவடிகளே ஆகும். இன்னும் சொன்னால் முருகா என்ற சொல் பன்மடங்கு துணையை கொடுக்கிறது. ஆக செய்த வினைகளை போக்கிட அருளுவது, அவனது பன்னிரு திருக்கரங்களும் ஆகும். அத்தோடு தனிமையான வழிக்கு என்றும் துணையாக விளங்குவது கந்தவேளின் திருக்கரத்தில் இருக்கும் கூர்ம்மையான வேலாயுதமாகும் என வேலின் சிறப்பினை இப்படி எழிய நடையில் சொல்கிறார் அருணகிரியார்.

தைப்பூசக் காலங்களில் நாம் காணும் அவலங்கள்
அர்ச்சனை பொருட்கள்
இறைவனை மனமுருகி பிராத்தித்து அவனருள் வேண்டி அர்ச்சனைகளையும் செய்த பின்னர், ஒரு சிலர் அர்ச்சித்த தேங்காய் பழங்களை உடன் கொண்டு செல்லாது, அதனை ஆலயங்களில் உள்ள மூலைகளில் விட்டுவிட்டு தட்டை மட்டும் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் அதில் உள்ள விபூதிகளையும் கண்மூடித்தனமாக ஆலய தூண்களில் வீசிவிட்டு செல்கிறார்கள்.
அன்பர்களே,

இவ்விடத்தில் ஒரு விஷயத்தை நாம் சற்று தெளிவுபடுத்தி கொள்வது மிகமிக அவசியமானவொன்று. இறைவனை அர்ச்சித்த விபூதியையே நாம் ஆலயத்தில் பெற்று கொள்கிறோம். அது மட்டுமல்லாது இறைவனின் நேரடி திருவருளை பெற்றவை அவை.
அதனால் தான் ஞானசம்பந்தர் சொல்கிறார்,
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
எத்துணை புண்ணியம் செய்திருந்தால் நாம் இந்துக்களாக பிறந்து இத்துணை பெருமை மிகு சுக போகங்களை அனுபவிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்போம்.
நமது இந்து சமயத்தில் திருநீறு அணிவதன் காரணம் இந்த உடலைவிட்டு உயிர் போன பின்னர், பிடி சாம்பலாய் தான் போகிறது ஆகவே, வாழும் காலங்களில் நம்முள் குடியிருக்கும் மூம்மலங்களாகிய ஆணவம், கன்மம் மற்றும் மாயையை விட்டு இறைவனை சரணகதி அடைய வழிக்காட்டும் தத்துவத்தை உள்ளடக்கியுள்ளது இந்த திருநீறு.
ஆகவே ஆலயத்தில் கொடுக்கும் சிவ பிரசாதத்தை முறையே பயன்படுத்துவதே சிறப்பாகும். அத்தோடு சிவ கணங்களின் கோபத்திற்கு ஆளாகமல் நம்மை காத்து கொள்ள இது சிறந்தோர் மார்க்கமாக அமைகிறது.
உணவு
நம்மில் அதிகமானோர் செய்யும் தவறுகளில் இந்த உணவுக்கும் ஒரு வகையில் பங்கு உண்டு. எப்படியென்றால் போதிய அளவு உண்டு விட்டு வீட்டிற்கு பொட்டலம் கட்டி செல்வது. ஆலயங்களில் நடைப்பெறும் மகேஸ்வர பூஜையானது ஏழைகளின் வயிறும் மனமும் நிறையவே. ஆக இந்த ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் எத்துணையோ, பேர் இன்றும் உள்ளனர். அதே வேளையில், ஆலயத்திற்கு வந்திருக்கும் அனைவரும் உண்டு மகிழ வேண்டுமே என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் மட்டுமே உண்ண வேண்டும் என்ற சுயநலத்தை ஒழித்திட வேண்டும். அதுமட்டுமல்லாது, உணவை உண்ட பின்னர் எச்சில் இளைகளை உண்ட இடத்திலேயே வீசி விட்டு போகுதல் போன்ற செய்கை அனைத்தும் பாவத்திற்கு உரிய செயலாகும். இவையாவும், சிவ கணங்களின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கி கொள்வதற்கு சமமான செயல்கள் ஆகும்.
காவடி ஆட்டத்தில் வந்த அவலம்

இப்பொழுதெல்லாம் முருகனுக்கு காவடி எடுத்தது போய் இடும்பனுக்கும், முனியாண்டி தெய்வமாகிய காவல் தெய்வங்களுக்கு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். மது அருந்தி கொண்டும், புகைப்பிடித்து கொண்டும், பக்தி என்ற போர்வையில் உடல் முழுவதும் முள் குத்தி கொண்டும், அகோர வேடங்களிலும் முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது நமது சமயத்திற்கு ஏற்ற செயல்கள் ஆகாது. இறைவன் எந்த காரணத்தை கொண்டும் நம்மிடத்தில் உடலை வருத்தி கொண்டு பிராத்தனைகள் செய்திட சொல்லி கேட்கவில்லை. அவன் நம்மிடத்தில் பக்தியையும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதுவே உண்மை. இது போக, இளைய சமூகத்தினரின் தெரு கூத்து ஆட்டங்கள் யாவும் நமது சமயத்தை இழிவுபட செய்யும் செயல்களே ஆகும். பிற இனத்தவர் நம்மை துச்சப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது நம் முகத்தில் நாமே காரி உமிழ்வதற்கு சமமாகிறது.
இறைவனிடத்தில் எதை வேண்டுதல் வேண்டும்
வள்ளலார் முருகப் பெருமானிடத்தில் எதனை வேண்டுதல் வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்னரே நமக்கு போதித்து விட்டார். அவை யாவன என்பதனை பின்வரும் பாடலின் வழி பார்ப்போம்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில்
வளர் தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் தூய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!
அழகான தமிழில் தெளிவாக நமக்கு வள்ளலார் பெருமான் போதித்து விட்டார் இப்பாடலில். ஆக இறைவனிடத்தில் விலைமிக்க பொருளையும், நமது ஆசைக்கு மிஞ்சியவற்றையே கேட்டு கொண்டிருப்பதை விடுத்து உள்ள உருகி இந்த துதிப் பாடலை ஒதிட இறைவன் நம் தேவையை அறிந்து அருளுவான்.
எதனை முருகப்பெருமான் நமக்கு அருளுவான் என்று கேட்டால் அருணகிரிநாதர் பதில் தருகிறார்,
கார்மா மிசை காலன் வரின் கலபத்
தேர்மா மிசைவந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே
காலன் வரும் முன்னர் கந்தன் வரவேண்டும் என்பது இப்பாடல். மாமர வடிவில் சூரன் வந்த போது அவனை இரண்டு கூறுகளாகப் பிளக்கும் படி வேலைச் செலுத்திய வேலாயுத பெருமானே! கருப்பு விலங்கான எருமை வாகனம் மீது எமன் என்னை நாடி வருவதற்கு முன்னர் மயில் வாகனத்தில் நீ அமர்ந்து கொண்டு விரைந்து வர வேண்டும். காலன் என்னை அணுகாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார்.
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்
அஞ்சல் எனவலிய                            மயில்மேல் நீ
அந்த மறலியொடு கந்த மனிதன் நமது
அன்பனெனை மொழிய           வருவாயே.
என்பது திருப்புகழ். முருகன் அடியார்கள் பால் எமன் வரமாட்டான். அதனால் தான் கார்மாமிசை காலன் வரின் என்றார். ஒரு வேளை அவன் வந்தால், நீ வந்து காக்க வேண்டும் என்பது  வேண்டுகோள்.
அதே போல் மற்றுமொரு இடத்தில்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன் வந்தால்
                                                                             என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்
என்று கந்தரலங்காரத்தில் இதே வேண்டுக் கோளை வைக்கிறார் அருணகிரிநாதர்.
அதுமட்டுமல்லாது மற்றுமொரு பாடலில் அருணகிரிநாதர் சொல்கிறார்,

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா!
அடிஅந் தமிலா அயல்வே லரசே!
மிடிஎன் றொருபாவி வெளிப்படினே.
அருணகிரியார் முருகனை அழைத்து வறுமையின் கொடுமையை கூறுகிறார். மெய்ஞானமாகிய கூர்வடிவேலைத் தாங்கிய அரசே! செல்வனாய் இருப்பனுக்கு அவனது தீவினை பயனால், வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி, ஊரறிய வெளிப்பட்டு தோன்றினால் அவனை விட்டு முதலில் தனம் போய்விடும். வறுமை வரும். இதனால் அவனுடைய அறஞ்செய்யும் மனம் போய்விடும். உயர்ந்த குடிபிறப்புக்கான தன்மைகள் போய்விடும். ஈகை முதலிய நல்ல குணங்கள் போய்விடும். சுற்றத்தாரும் அவனைவிட்டு வேறிடத்திற்கு போய்விடுவார்கள் என்கிறார் அருணகிரியார்.
இதன் மூலம் வேறொரு செய்தியைக் கூறுகிறார். வள்ளல் முருகனிடத்தில் வறுமையின் கொடுமையை சொல்வது போல உன்னைத்தொழும் அடியார்களுக்கு வறுமை வந்தால் நீ அருள வேண்டும் என்கிறார் அருணகிரியார். இது பொருள் வறுமை அல்ல, அருள் வறுமை. உன் திருவடியை நினைப்பது செல்வம். மறப்பது வறுமை. இந்த வறுமை வந்தால் அவர்களுடைய மனமும் உயிரில் விளங்கும் அருள் ஒளியும் அடிமைத் திறமும், அடியார் கூட்டமும் எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணும் அருட்பண்பும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கி விடும். இந்த நிலை வரக்கூடாது. முருகா! உன் திருவடிகளை நினைத்துச் செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே என்று வாழ்த்துகிறோம். இந்த அருட்செல்வம் போய் வறுமை போய் வராமல் காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பாக வேண்டுகிறார் அருணகிரியார். ( விளக்கம் - பொற்கிழி கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்)
மேலும் முருகப்பெருமானை வணங்கிட அருணகிரியார் சொல்கிறார்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
அதாவது தீய நாட்கள் அடியேனை என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த நவக்கிரங்கள் என்ன செய்யும்? கொடிய இயமனால் தான் என்ன செய்ய முடியும்?  குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும் தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன் வந்து தோன்றிடும் போது இவற்றுள் எது என்னை நெருங்கிவிடும் என்கிறார் இந்த கந்தரலங்காரத்திலே.
ஆகவே, இறைவனை பக்தியால் துதித்து அடியார் பெருமக்கள் அருளிய மந்திர ஆற்றல் மிக்க பாடல்களை ஒதி மனமுருகி பிராத்தனை செய்து அவனருள் பெறுவோமாக.
சிவாய திருச்சிற்றம்பலம்.

- விக்ரமன் பொன்ரங்கம்

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...