Sunday, 26 April 2020

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 18, 1836
இடம்: காமர்புகூர், மேற்குவங்கம் மாநிலம், இந்தியா
இறப்பு: ஆகஸ்ட் 16, 1886
தொழில்: ஆன்மீகவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18  ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ளகாமர்புகூர்என்ற இடத்தில்குதிராம்என்பவருக்கும், தாயார்சந்திரமணி தேவிக்கும்நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை. மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்
தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்றுநினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார். 
பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.



ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்
·   ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
·  இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
·   உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
·      சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
· மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
இறுதி வாழ்க்கை
தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்தஒப்பற்ற மனித தெய்வம்ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.





Sunday, 8 March 2020

சரியான வழிதடத்தை நோக்கி செல்வோம்

சமீப காலமாக வலைத்தளங்களில் இந்து சமயத்தை குறித்து அவதூறான கருத்துக்களை வெளிப்படுத்தும் கணோலி அதிகமாக பரவி வருவதை நான் கண்டேன். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த திராவிட கழகத்தை சார்ந்த அரசியல் தலைவர்களுடைய பதிவுகளே, அதிகமாக காணப்பட்டு வருகிறது. ஒரு புறம், பக்தி மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒருவர் இந்து சமயத்திற்கு இன்னல் விளைவித்து கொண்டு வருகிறார்; மற்றொரு புறம், இறைவனையே தூற்றி பேசுவார் பின்னர் அவரையே எங்களது பாட்டன், அவனன்றி எதுவும் இல்லை என்று நா கூசாமல் பேசுவார் ஒருவர்.

இவர்களையெல்லாம் கடந்து ஆதி மூலன் ஒருவனை தவிர மற்றவர் எல்லாம் சிறு தெய்வத்திற்கு சமமானவர் என்றும் சொல்வர். திருமுறைகள் தான் எங்கள் வாழ்வு என்பர். பிறகு நால்வர் காட்டிய வழியை மட்டுமே பின்பற்றுவோம் என்பார். இவர்களது பேச்சை கேட்க இருக்கு ஆனால் இல்லை, என்ற விதாண்ட வாத பேச்சுக்கு ஒப்பாக அமைந்துள்ளது.
திருமுறைகளை சைவ சமயத்தில் சேக்கிழார் பெருமான் பன்னிரண்டாக பிரித்து நமக்கு அருளியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், சக்தி, பெருமாள் என சன்மத கோட்பாட்டிற்கு இணங்கிய வண்ணம் தெய்வங்களை குறிப்பிட்டு அருளாளர் பெருமான்கள் நமக்கு அருளியுள்ளனர். அதை மறுக்க இயலுமா?

பரம்பொருள் என்பவர் ஒருவர்தான் என்ற கருத்தை கட்டாயம் எடுத்து கொள்ளத் தான் வேண்டும். ஆயினும், அவரவருடைய நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை பதிய வேண்டாம் என்பதே என்னுடை வேண்டுகோள் ஆகும். நமக்குள் நாமே தெய்வங்களை பிரித்து சண்டை போடுவதற்கு இது சோழர்கள் காலம் அல்ல. உலகம் நவீன மயமாகி போய் கொண்டிருப்பதை சற்று சிந்திக்கவும் வேண்டுமே என்றுதான் சொல்கிறேன். எம்முடைய இப்பதிவு யார் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்துவதாக இல்லை.


நமது நாட்டில் அவ்வப்போது எழக் கூடிய மதமாற்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும். இப்படிப்பட்ட சூழலில் சமய அறிவு குன்றியிரக்கும் பாமர மக்களிடத்தில் குழப்பத்தை உண்டு செய்வது தவறு என்ற என்னுடைய தரப்பு கருத்தை பதிக்கிறேன். அதுமட்டுமல்லாது நாம் ஒரு இந்துவாக, சனதன தர்மத்தை கைப்பற்றியிருக்கும் சைவராக, வைஷ்ணவராக தாழ்மையோடு கேட்டு கொள்வது என்னவென்றால், சமூக வளைத்தலஙகளில் நம்முடைய சமயத்தை குறித்து வெளிவரும் அவதூறான காணொலி மற்றும் கருத்துக்களை பகிராமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காரணம் பல்லின மக்களும் உலாவி வரும் இந்த சமூக வளைத்தலத்தில் நம்முடைய சீர்கெடுவது குறித்த பதிவுகளால் நமக்கு நாமே அவலநிலையை கொண்டுவருவதற்கு சமானமாக அமைகிறது. ஆகவே வேண்டி கேட்பது ஒன்றே ஒன்று தான், நல்ல பதிவுகளையும், பயன்மிக்க கருத்துக்களையும் பதிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.

விருச்சத்தின் நிழலில்,
விக்ரமன் பொன்ரங்கம்

Friday, 6 March 2020

திறமைக்கு மதிப்பளியுங்கள்!


சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்படம் என்னை நெகிழ வைத்ததோடு, உண்மையும் வரக் கூடிய காலங்களில் நம்முடைய இளைய சமூகம் சீர்கேட்டு பிரச்சனைக்கு ஆளாகமல் சரியான வாழ்க்கையை தேர்வு செய்து செல்ல வழிகாட்டுதலாக அமைந்திருந்த திரைக்கதை. சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் அவர்களது இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஹிரோ. கல்வியில் சிறந்த அடைவுநிலை பெறாது போகும் இளம் மாணவர்களுக்குள் உள்ள தனித்திறனை வெளிப்படுத்தி அவர்களாலும் முடியும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் வகையில் அமைந்த கதை. திரைப்படத்தில் நாம் கண்ட காட்சிகளை ஒரு தரப்பில் சிந்தித்து பார்த்தால் நிஜத்தின் நிழல்களாகவே தோன்றும். 

இது போன்ற கதை அம்சத்தோடு காலத்திற்கு ஏற்ப ஒரு திரைப்படம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில நண்பன், தோனி என்ற படங்கள் திரைக்கு வந்த சில காலம் வரை தான் அதன் பாதிப்பு நம்மை தாக்கியிருக்கிறது. பின்னர் படம் பழைமையடைந்ததும் நாமும் வழக்கம் போலவே வேதாளம் முறுங்க மரம் ஏறிய கதையாக போய்விடுகிறோம். திரைப்படங்கள் பாதிப்பால் எத்தனையோ தீய பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு நீங்காது உள்ளது; ஆனால் நல்லவையை எடுத்து சொல்லக் கூடிய பாதிப்பு நமது செவிகளுக்கும் அறிவுக்கும் எட்டாமலே போய்விடுகிறது.
எத்தனையோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமையை கண்டறியாது, 

படி படியென்று பாடங்களிலும் தேர்வுகளிலும் மட்டுமே தங்களது பிள்ளைகளின் கல்வி திறனை மதிப்பிடு செய்கின்றனர். ஆனால் கல்வியால் சிறந்த அடைவு நிலையை கொண்டு வர முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்குள் விளையாட்டிலோ, தொழில் திறனிலோ, இசை, நடனம், வரைதல் போன்ற கலைச் சார்ந்த துறைகளிலோ தனி திறமைகளானது ஒழிந்திருக்கும். அவற்றில் ஆர்வமானது மிகுதியாகவே காணப்படும். 
பெற்றோர்கள் ஒரு நிமிடம் தங்களை நீதி வழக்கு கூண்டில் நிறுத்திக் கொண்டு பின்வரும் கேள்விகளுக்கு விடையளித்து பாருங்கள்,

1. என்னுடைய மகன் / மகள் உடைய தனி திறமையானது எது?
2. என்னுடைய பிள்ளைகளிடத்தில் என்றாவது நான் நண்பனாக மாறி மனம் விட்டு பேசியது உண்டா?
3. எப்போதாவது நான் அவர்களை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது உண்டா?
4. என் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து செயலாற்றியது உண்டா?

இதன் விடைகளே, உங்களது பிள்ளைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை மதிப்பீடு செய்யும். காலங்கள் மாறி கொண்டு வருகிறது, இப்பொழுதெல்லாம் பெற்றோர் முன்பை போல இல்லை, தவறாக குறை கூறி இது போன்ற பதிவுகளை பதியாதீர் என்று சொல்லாதீர்கள். காரணமில்லாமல் இந்த பதிவினை நான் பதியவில்லை. காலங்கள் மாறி வரலாம். ஆனால் சிந்தனை மாற்றங்கள் மட்டும் இல்லாமலே போய்விட்டதே.

இன்று பள்ளிகளில் ஒழுக்கப் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் மனம் விட்டு பேசாது போனதே காரணமாகவுள்ளது. தேர்வு என்பது ஒரு காகித மதிப்பிடே, அதற்கு எவருடைய திறமையை காண இயலாது. வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியறிவு மட்டும் போதாது, திறமையென்பதுவும் அவசியம். 
தற்சமயம் SPM / STPM தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டுமே பாராட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகத்துறை சிறந்த அடைவுநிலை பெற்ற மாணவர்களையோ, அல்லது சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கோ ஊக்குவிப்பு வழங்க தவறிவிட்டது.  பெற்றோர்கள் இந்த தருணத்தில் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும் முழு பலமாகவும் இருந்து அவர்களுக்கு சிறந்த வழிக்காட்டுதலை வழங்க வேண்டும் என்பதே இந்த பதிவில் என்னுடைய ஆழ்ந்த கருத்தாகும். 

அப்துல் கலாம் ஐயா அவர்கள் இந்தியாவில் பிறந்த இளைஞர்களுக்கு மட்டும் தம்முடைய கருத்துக்களை பதிவு செய்யவில்லை. உலகெங்கும் பறந்து கிடக்கும் தமிழின மக்கள் யாவருக்குமே பதிவு செய்வித்த கருத்தாகும். 
ஆக சிறந்த சமுதாயத்தை உருவாக்க இன்றே விதைகளை விதைப்போம்.

விருச்சத்தின் நிழலில், 

விக்ரமன் பொன்ரங்கம்
07/03/2020

Friday, 24 May 2019

விழித்தெழுவோம்


சமிபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருந்த ஒரு காணோலியை கண்டு வேதனைக்குள்ளானேன். அது என்ன காணோலி என்றால் ஒரு சிறுவன் சுமார் பத்து முதல் பதினொரு வயது மட்டுமே ஆகியிருக்கும். மது அருந்தி கொண்டு சுருட்டு பிடித்து கொண்டு முனிஸ்வரர் போல் ஆட்டம் போட்டு கொண்டும் கூச்சலிட்டு கொண்டு இருப்பது போல் இந்த காணோலி அமைந்தது. 

ஒரு நிமிடம் நாம் சற்று அறிவுமிக்கவர்களாகவும் சமயத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருந்து சிந்தித்து பார்ப்போம். நமது சமயம் சீர்கெடுவதற்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் முதற் காரணமா அல்லது இது போன்ற காரியங்கள் நடைபெறும் போது வேடிக்கை பார்த்து கொண்டும் அச்சிறுவனுக்கு ஊக்குவித்து கொண்டிருந்தவர்கள் போன்ற நமது சமயத்தை சார்ந்தோர் காராணமா? பிற மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து மதத்தை ஈழிவுபடுத்திவிட்டால் கொதித்து எழும் நாம் ஏன் எட்டப்பனாக இருந்து வேளை செய்வோர் மீது எந்த கோபமடைவதில்லை? 

உயர்ந்த லட்சிய கனவுகளை சுமந்து செல்லக் கூடிய வயதில் இப்படி இந்துகளுக்கு பிற மதத்தினர் இகழ்ந்து பேசும் வாய்ப்பினை நாமே உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறோம். குழந்தையின் வடிவில் தெய்வத்தை காணுங்கள் என்று நமது சமயம் தான் சொல்லியுள்ளது. அதனை ஒரு காரணத்தோடு தான் சொல்லியிருக்கின்றனர். பிறந்து பல படிநிலைகளை கடந்து வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நாம் தான் ஒரு உதாரணமாக அமைய வேண்டும். ஆனால், இந்த காணோலிக்கு எதிர் காணொலியாக மற்றுமொரு காணொலியையும் நான் பார்த்தேன். அது என்னவென்றால் அதே முனிஸ்வரர் ஆட்டத்தை இல்லத்திலே பயிற்சி செய்வதாக  அந்த காணொலி அமைந்துள்ளது. இன்றைய குழந்தைகளது அனிவு திறனானது காந்தத்தை போன்று அதி வேகமாக ஒரு விஷயத்தை பற்றி கொள்வதாகும். அது மட்டுமல்லாது கரப்பனை திறனை தங்களுக்குள் அதிகமாக வைத்திருக்கும் ஆற்றல் மிக்கவர்கள். எதை அவர்கள் பார்க்கின்றனரோ அதுவாகவே ஆக விருப்பம் கொள்கின்றனர். நாம் எவ்வழியிலான போதனைகளை வழங்குகிறோமோ அதையே அவர்கள் பின் பற்றுகின்றனர். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு சமம். 

கவிஞர் கண்ணதாசன் சொன்னதை போன்று எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிகளுக்கு ஒப்ப பெற்றோர்களது வளர்ப்பிலும் அரவணைப்பிலுமே உள்ளது. விஞ்ஞானத்தை இன்று மிற வைத்து கொண்டிருக்கும் அதிசயத்தை கொண்டிருக்கும் நமது இந்து மதம், நமக்கு பலவற்றை போதித்திருந்தும் நாம் அவற்றை பின்பற்றது இன்னும் கிணற்று தவளையாகவே இருந்து வருவதை கண்டு மனம் வேதனை கொள்கிறது. சிந்தனை மாற்றம் நம்மிடையே வந்தால் மட்டுமே நாம் முன்னேற்றத்தை நோக்கி பயணத்தை தொடர முடியும். நாடு தழுவிய அளவிளே நடைபெற்று கொண்டிருக்கும் பல போட்டிகளில் நமது இந்திய மாணவர்களது சாதனைகளை காணும் போது வார்த்தைகளில் அடக்கி வைக்க முடியாத அளவிலான ஆனந்தம் பிறக்கிறது. 

நல்ல சிந்தனைகளை விதைப்போம் நமது மாணவ சமுதாயத்திடம். எதை இன்று நாம் விதைக்கிறோமோ அதையே வருங்காலத்தில் அறுவடையும் செய்யப் போகிறோம். மாறுவோம் மாற்றுவோம்.

Monday, 19 November 2018

Is poverty a mess?


For a few hours with lovable relationships,

In today's time, many of us do not seem to be progressive because of the poor. It is rare for us to see how high our people are, even if the state of the country is raising them up and giving them opportunities.

Dr. APJ Abdul Kalam will surrender from the curse of poverty with a weapon of education to comply with their vote. But in the hands of the knowledge of the knowledge we are not going to know somewhere. The consequences of our society are going to be guilty. According to a recently published survey, from 55% percent of SPM students 44% of Indian students in the SPM exams getting a good result.

In fact, 13% of Indian students stop studying at primary school. At secondary school, 8% of students leave school in half. Only 4.5% of Indian students apply for higher education.

Guys, we need to raise the burden of those who are below us when we rise to the education of the education. We're still in the lowest position today because we're going on what's going on. We're just talking about the shortcomings. Dr. APJ Abdul Kalam, as they say, has been allocated to one side of the pages of history for everyone born in this world. But it is in our hands to read the world that page.
During creation, God did not create anyone in the sense of money, position, and nobleman. By the time their work is done by knowledge and knowledge. If you are rich or poor, you will be hungry if you eat it. It's like dreaming to be in everyone. We must try to achieve that.

A message from Saint Thiruvalluvar is the same,
If one is born (in this world), one had better shine forth with fame; it is better that one, who does not have fame, is not born, than be born.

Again in a good time ...
Vickraman Ponrangam


Friday, 9 November 2018

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article 2


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

கந்த சஷ்டி விரததின் மறு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதோடு முருகனின் திருவருள் கிட்டி வாழ பிராத்திக்கிறோம்.
இப்பதிவில் கந்த சஷ்டி விரதத்தின் பலன் யாதென்பதை காண்போமாக.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை
கந்தனுண்டு கவலையில்லை, குகனுண்டு குறைவில்லை என்பர்.

ஆக கந்த வேலை உருகி இந்த கந்த சஷ்டி விரத்தினை அனுஷ்டிப்பதால் நம்மை சுற்றியிருக்கும் தீமைகள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வில் உய்வடைவோம் என்பதுவே இவ்விரத்தின் முக்கிய அம்சமாகும். இவ்விரத்தை சுட்டி காட்டி நமது முன்னோர்கள் அருள் மொழியாக பழமொழியினையும் நமக்கு சொல்லி சென்றுள்ளனர் என்பது கூறிப்பிட தக்கது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் வரும் என்று. அதாவது கந்த சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பை என்னும் கருப்பபையில் குழந்தை என்னும் செல்வம் என்பது வரும்.

அதுமட்டுமல்லாது, நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கு நவக்கிரக தோஷங்கள், மரண பயம், வறுமை, தீராத உடல் நோய் யாவையும் தீர்க்கவல்ல அற்புதம் நிறைந்த விரதமே கந்த சஷ்டி விரதமாகும்.
திருமுருக கிருபனந்த சுவாமிகள் எப்பொழுதும் முருகனை ஒரு வாசகத்தில் பின்வருமாறு சுட்டி காட்டுவார்கள் "கேட்ட போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் பன்னிரு கரங்களினால் வாரி தரும் வள்ளல் முருகப்பெருமான். அப்படி வாரி வழங்கும் வள்ளலுக்கு ஏற்ற மனைவியாம் வள்ளி. அதனாலேயே அவர்கள் வள்ளல் வள்ளி என அன்போடு அழைக்கப்படுகிறர்".
துன்பங்கள் சூழ்ந்து கொண்டு கண்ணை இருட்டிக்கும் போது துணையாக ஒரு தேடல் வேண்டும் என்றால் அழைப்பின்றி வருபவன் முருகன்.
அதனையே அருணகிரிநாதர் பாடுகிறார்

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் 
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.  

என்று முருகப்பெருமானின் தனிப்பெரும் கருணையினை விளக்குகிறார். அதிலும் வள்ளியென்னும் மானுட பெண்ணின் மீது முருகன் வைத்திருக்கும் காதலினை அருணகிரி அழகாக வெளிப்படுத்துகிறார். நம்மில் ஒரு அங்கமாக இருக்கும் வள்ளி அம்மையார் மீதுள்ள பக்தியினை பல பாடல்களிலும் அருணகிரிநாதர் வெளிப்படுத்துகிறார். எடுத்துகாட்டாக,

பாதி மதி நதி போது மணிசடை 
                            நாத ரருளிய .... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் 
                                 பாதம் வருடிய ... மணவாளா

என்று சிவப்பெருமானின் நெற்றி கண்ணிலிருந்து உதிதெழுந்த முருகன் வள்ளி என்ற மானுட குறத்தியின் காலை வருடி விடுகிறார் என அழகு தமிழில் சுவை குறையாது சொல்லியுள்ளார். ஆக நமக்கு துன்பம் வந்தாலும் அவற்றை தனதாக்கி காப்பாவன் முருகன் என்பதுவே இதன் பொருளாக கொள்ளலாம்.

மேலும் அடுத்த பதிவினில் கந்த சஷ்டி விரதத்திற்கு மூலமாக இருக்கும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்பினை காண்போமாக.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

கந்த சஷ்டி விரத சிறப்பு Skanda Sasti Article


கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் 
நற்றுணையாவது நமச் சிவாயவே

திருமுருக பெருமானின் விழாக்களிலும் சரி விரதங்களிலும் சரி முருகன் அடியார்களுக்கு மிகப் பெரிய பக்தியை தரவல்லது என்றால் அது கந்த சஷ்டி விரதமே ஆகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்விக்கும் உன்னத திருநாளே இந்த கந்த சஷ்டி விரதமாகும். இந்த பதிவில் நான் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கும் முறையினை பற்றி விளக்குகிறேன் பின்னர் தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் இவ்விரதத்தின் மற்றும் பல சுவை மிகுந்த செய்திகளை பகிர்கிறேன்.

பொதுவாகவே கந்த சஷ்டி விழா திருசெந்தூர் முருகன் ஆலயத்திலே மிகவும் விமரிசையாக கொண்டாட படுவதோடு சகல முருகன் திருத்தலங்களிலும் ஆறு நாட்களுக்கு விசேஷமாக நடத்துவது வழக்கம். இந்த விரத்தினை அனுஷ்டிப்போர் உண்ண நோன்பினை மேற் கொள்ள வேண்டும் என்பது விரத முறையின் கோட்பாடு. இருப்பினும் முடியாத பட்சத்தில் உள்ளவர்கள் புலால் உண்ணாது மரக்கறி உணவினை உட்கொண்டு கடைப்பிடிப்பது மிக அவசியம். இதுவே விரதத்தின் முதல் கட்டு. கட்டு என்பது நம்மை ஒழுக்க நெறிக்குள் கட்டுப்படுத்தி கொண்டு இருப்பது.

ஒரு கட்டுப்பாட்டுக்குள் நம்மையும் நமது மனத்தினையும் வைக்காவிடில் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை வாழ்வதோடு பல இன்னல்கள் நம்மை சூழ்ந்து கொள்ள நாமே வழிவிட்டதாக போய்விடும். விரத காலங்களில் புலால் உண்ணாதிருக்க வழியுருத்து வதன் முக்கிய நோக்கம் யாதெனில் ஒர் உயிரை கொன்று அதனை புசிப்பதென்பது நமது சமயத்தில் சொல்லப்படாத கூற்றாகும். இது பக்தி நெறிமிக்க ஒரு இந்துவுக்கு பொறுந்தாத ஒன்றாகும்.
ஆக இந்த கந்த சஷ்டி விரதத்தின் போது உடலை வருத்திக் கொண்டு யாரையும் விரதம் இருக்க இறைவன் ஆணையிடவில்லை. இருந்த போதிலும் கந்த சஷ்டி விரதம் மற்ற விரதங்களுக்கு எல்லாம் அப்பால் சற்று மாறுப்பட்டதாகும். இந்த விரத்தினை பல்வேறு வகையாக அனுஷ்டிக்கலாம்.

  • விரதம் துவங்கும் முதல் நாள் காலை பக்தியோடு நீராடி காலையில் பால் பழம் உண்ட பின்னர் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு உணவு ஏதும் இன்றி இருப்பது ஒருவகை விரதம்.
  • பால் பழம் தவிற வேறு ஆகாரம் இன்றி இருப்பது ஒருவகை விரத முறையாகும்.
  • இன்னும் சிலர் மிளகு விரதமும் இருப்பர். முதல் நாள் ஒரு மிளகு சாப்பிட்டு விட்டு தண்ணீர் அருந்துவர், வேறு ஆகாரம் ஏதுமில்லை. பின்னர் இரண்டாம் நாள் இரண்டு மிளகு நீர். இவ்வாறு நாளின் எண்ணிக்கையில் மிளகினை உண்டு தண்ணிர் மட்டுமே அருந்தி விரதம் கடைப்பிடிப்பர்.

இவ்வாறு ஐந்து நாட்களுக்கு விரதம் இருந்து ஆறாவது நாள் கந்த சஷ்டி விரத்தின் போதாவது முடிந்த வரை உண்ணா நோன்பிருப்பது வெகு சிறப்பாகும். மாலையில் சூரன் சம்ஹாரம் செய்த பின்னர் பால் பழத்தினை உட்கொள்வது உகந்தது ஆகும்.

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...