Thursday 20 July 2017

Say No To Bully! பகடிவதை வேண்டாம் தம்பி!

இன்று மலேசிய திருநாட்டில் பரவலாக பரவி கொண்டிருக்கும் செய்தி பகடிவதை. பகடிவதை என்பது இப்பொழுது புதிதாக முளைத்து வந்த பிரச்சனை அல்ல. பல வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான். விளையாட்டாக செய்ய போய் அது வினையாக முடியும் என்பதனை உணராமல் அதை எண்ணுகின்றனர் இன்றைய இளைஞர்கள். இன்று பகடிவதை நம் நாட்டை பொருத்த வரை இதனை பரவலாக பேச காரணம் சம்பவம் ஒன்று பெரிதளவில் நடந்திருப்பதால் தான்.
யாரெல்லாம் இந்த பகடிவதையில் சம்பந்தப்படுகின்றனர்?
இன்றைய காலக்கட்டத்தில் அதிகமான இளைஞர்களே இதில் சம்பந்தப்பட்டு வருகின்றனர் என்று ஆய்வின் படி தெரிய வருகிறது. அத்தோடு இச்சம்பவங்களில் துவக்கம் பள்ளி பருவத்திலிருந்தே ஆரம்பமாகிறது. ஆனால் இதனை சிறுவர்களுக்குள் உண்டாகும் விளையாட்டுகள் என்று கண்டும் காணாது உள்ளோம் என்பது தான் உண்மை.
எது போன்ற சம்பவங்கள் எல்லாம் பகடிவதைக்கான அறிக்குறியாகும்?
·      பெற்றோர் பெயரை கூப்பிட்டு கேளி செய்வது
·      அவர் தம் குறைகளை கிண்டல் செய்தல்
·      தம் சுய விருப்ப வெருப்பிற்காக பிறரை துன்புற செய்வது
·      தீய பழக்க வழக்கங்களில் ஈடுப்பட சொல்லி மிரட்டுவது
·      பணம் கொடுக்க சொல்லி துன்புறுத்துவது
·      தனக்கு அடிமையாக இருக்கும் படி செய்வது
·      காரணமில்லாமல் அடிப்பது, உதைப்பது
·      பிறர் தம்மை கண்டு பயப்பட செய்வது.
·      சக மாணவ மாணவியர்களிடமிருந்து தவறான புகார்களை சொல்லி ஒதுக்கி வைப்பது.
·      இன வேற்றுமையை காட்டுவது
·      பெண்களை அபாசமாக படம் பிடித்து (Social Media)-வில் பதிவிடுவது
·      பிறர் உரிமைகளைப் பரித்து கேளிக்கைக்கு ஆளாக்குவது
·      பெண்களை தங்களோடு உறவு வைத்து கொள்ள சொல்லி மிரட்டுவது
·      காதலிக்க சொல்லி மிரட்டுவது
இது போன்ற சம்பவம் நடப்பதற்கான காரணம்?
பெற்றோர்களின் கண்டிப்பு தங்கள் பிள்ளைகளிடம் குறைவாகவே காணப்படுகிறது. சுதந்திரம் என்ற பெயரில் அளவில் அடங்காத தவறுகளை செய்ய தூண்டும் நண்பர்களின் உறவுகள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான் என்பது போல் பிள்ளைகள் செய்யும் தவறுகளை தந்தையர்களிடமிருந்து மறைக்கும் தாயார்கள். பிள்ளைகள் முன்பே கட்டிய மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டுவது அடிப்பது. இதுப் போன்ற சம்பவங்களே இன்றைய இளைய சமுகத்திடையே பெரியதொரு பதிப்பை சிறு வயது துவங்கியே உள் மனதில் பதிந்து விடுகிறது.
ஆக இது போன்ற சம்பங்களின் பாதிப்பே, இளைய சமுகத்திற்கு முதற் பாடம். உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் தந்தை புகைப்பிடித்து கொண்டு, மது அருந்தி கொண்டிருந்தால், மகனும் அவ்வாறே மது அருந்தி கொண்டு, புகைப்பிடித்து கொண்டிருப்பான். அதே அக்குடும்ப தலைவர், சிறந்த தந்தைக்கான உதாரணமாக இருந்தால் அவர்தம் பிள்ளைகளும் சிறப்பாக இருப்பார்கள் என்பது பலரும் கண்டறிந்த உண்மை. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்கிறோம். நமது பிள்ளைகளுக்கு எந்த வயதில் என்ன தேவை என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். அதற்கேற்ப செய்வது சால சிறந்ததாகும்.
பகடிவதைக்கான தீர்வு
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் அளவிற்கு கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமயத்தின் மீதும் பொது சேவைகளிலும் தங்களை ஆர்வப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றொர்களும், ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளின் தனி திறனை முதலில் கண்டறிய செய்தல் அவசியம். அதன் மூலம் அவர்களை அதிகமாக உற்சாகப்படுத்தி அவர்களின் திறமைகளை வளர்க்கும் திறவு கோளாக இருங்கள். அவர்களின் வெற்றிக்கு பின்னால் உங்களின் பங்கும் இருக்குமாறு முயற்சியுங்கள்.
அத்தோடு மட்டுமில்லாமல், பெற்றோர்கள் தயவு செய்து தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள். மேலும் உங்கள் பிள்ளைகளின் முன்பு பிறரைப் பற்றி திட்டுவதோ கேவலப்படுத்தி பேசுவதோ, சண்டை போட்டு கொள்வதையோ செய்யாதீர்கள். பெண் பிள்ளைகளுக்கு குடும்ப பண்பையும், தன்னை தற்காத்து கொள்ளும் திறமைகளையும், கற்றுக் கொடுங்கள். வாரம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு போவது, உணவு உண்பது, மாலை நேரங்களில் பொழுதை கழிப்பது, பிள்ளைகளோடு மனம் விட்டு பேசுவது போன்ற காரியங்களில் தங்களை ஈடுப்படுத்தி கொள்ளவது அவசியம்.
தங்கள் பிள்ளைகள் தவறு செய்துவிட்டால் திருத்தி கொள்ள கற்றுக் கொடுங்கள். பெற்றோர்களோடு தைரியமாக பேச சூழலை உருவாக்கி கொடுப்பது பெற்றோர்களின் கடமை.
ஆகவே நமது மதத்தினை உயர்த்துவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். நாளைய சமூகப்பணிக்கு இன்றிலிருந்தே நாம் இளைய சமூகத்தை சிறந்தவர்களாக உருவாக்குவது நமது தலையாய கடமையாக கொண்டு செயல்படுவோமாக. சிறந்த இளைஞர்களை உருவாக்கி பல துறைகளில் பலரும் சாதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...