Sunday 24 June 2018

இல்ல வழிபாட்டில் துவங்கி ஆலயம் வரை (பகுதி 1)



திருச்சிற்றம்பலம்,

மனிதன் இன்று எவ்வளவு நவீனமாக வாழ்ந்தாலும் அல்லது உயர்ந்தாலும், எதாவது ஒரு கட்டத்தில் இறைவனிடம் தஞ்சம் புகுந்தே ஆக வேண்டும் என்பது இயல்பு. நமது இந்து மதம் என்பது
விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் அடிப்படையாக கொண்டே வழிகாட்டுகிறது. அந்த வகையில் தனி ஒரு மனிதனுக்கு இறை பக்தி சேவை என்பவை முதலில் இல்லத்திலிருந்தே வருகிறது என்பதுவே உண்மை.

மேலே அடியேன் குறிப்பிட்டது போல விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் அடிப்படையாக கொண்டிருக்கும் நமது சமய நெறிகளில் அவ்வப்போது இயற்க்கையையும், அறிவியலையும் சார்ந்தே இல்ல வழிபாட்டினை நாம் செய்கிறோம் என்பதில் நாம் தெளிவாக இருத்தல் வேண்டும். அத்தோடு ஒரு இல்ல வழிபாட்டிற்கு அடிப்படையாக கடைப்பிடிக்க வேண்டியவைகள் யாவை என்பதனையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைய வாழ்வியல் சூழலில் மன அமைதிக்காக எதை எதையெல்லாமோ நாம் செய்து வருகிறோம், பணம் செலவு செய்வதும், நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடத்தில் ஆலோசனைகள் பெற்றும் பலர் தங்களது தினசரி வாழ்வை நடத்தி வருகின்றனர். இங்கே நான் சமிபத்தில் படித்து பிடித்த கதையொன்றை பகிருகிறேன்.
வெளிநாடு ஒன்றில் கணவன் மனைவி இருவரும் அதிகமான சம்பளத்திற்கு வேளை பார்த்து வருகின்றனர். சில காலங்களுக்கு பின்னர், கணவருக்கு தனது தாயரை தன்னுடனே வைத்து பார்க்க ஆசை, தாயார் வெளிநாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தாயரும் இவர்களோடு வந்து வாழ்கிறார்.

கணவனும் மனைவியும் காலையில் வேளைக்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவர். வீடு திரும்பும் நேரத்தில் மனைவி சற்று முன்னதாகவும் கணவன் சற்று தாமதமாகவும் வருவர். இதனை கவனித்து வந்த தாயார் ஒரு சமயம் மகன் வீடு திரும்பிய பின்னர் தாங்கள் தாமதித்து வருவதையும், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பற்றியும் வினவினார். அப்பொழுது மகனும் தன் தாயிடம் எல்லா விஷயங்களையும் எடுத்து கூறினார். தாங்கள் வேளை பார்க்கும் இடத்தில் இருக்கும் வேளைப் பழுவின் காரணத்தால் மருத்துவரிடத்தில் பணம் கொடுத்து ஆலோசனை பெறுவதாக சொன்னார். இதனை கேட்ட தாய் சற்று திடுகிட்டு போக தன் மகனிடம் நாளை வேளை முடிந்தப் பின்னர் நேராக வீட்டிற்கு வருமாறு பணித்தார். மகனும் அவ்வரே செய்தார். தாயார் வீட்டிற்கு திரும்பிய மகனிடத்திலும் மருமகளிடத்திலும் போய் குளித்து வீட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்ப அவ்வாரே அவர்களும் செய்தனர். தாயார் அவர்களது இல்லத்தில் அமைதியாக இருக்கும் ஒரு அறையில் சுடர் விட்டு எரியும் விளக்கினை வைத்து மகனையும் மருமகளையும் சற்று நேரம் தியானித்து இருக்குமாறு சொன்னார்.

இதனை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்த பலன் மருத்துவர் கொடுத்த ஆலோசனையை விட பன்மடங்கு அதிகமான அமைதியை கொடுத்தாக உணர்ந்தனர்.


இக்கதையின் நீதி என்னவென்றால் ஆங்கிலத்தில் சொல்லும் Positive Energy அதிகமாக இருக்கும் போது நம்முள் இருக்கும் மனம் சார்ந்த பிரச்சனைகளிருந்து நாம் நம்மை பாதுகாக்கலாம்.

அதற்கு தான் நமது முன்னோர்கள் இல்லத்தில் Positive Energy நிலவ வேண்டும் என்பதற்காக இல்ல வழிபாட்டினை நமக்கு போதித்தனர்.
ஆக தொடர்ந்து இல்ல வழிபாட்டின் மகத்துவத்தினை பற்றி இப்பகுதியிலே நாம் பார்ப்போம்.

தொடரும்...

விருச்சத்தின் கீழ்,
விக்ரமன் பொன்ரங்கம்

2 comments:

  1. நன்கு உள்ளது. தமிழ் மொழியை சிதைக்காமல் எழுதவும் வேளை அல்ல. அது வேலை என்று எழுதப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. வணக்கம். கதையோடு இல்ல வழிபாட்டின் மகத்துவத்தை விளக்கியது நன்று. வாழ்க. வளர்க. திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete

மறந்து போகும் தமிழ் சான்றோர் - வ. உ. சிதம்பரம் பிள்ளை

  வ. உ. சிதம்பரம் பிள்ளை வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்த...